கம்பம் நகராட்சியில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தேனி கம்பம் நகர்மன்ற தலைவர் திருமதி.வனிதா நெப்போலியன் மற்றும் துணைத் தலைவர் மீது தமிழ்நாடு நகர்புறச்சட்டம் 1998 பிரிவு 51-ன் கீழ் சுமார் 22 நகர் மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டி நகராட்சி ஆணையாளரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்.
கம்பம் நகராட்சியில் உள்ள, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் 22 பேர்கள், தலைவர், துணை த்தலைவர் மீது நம்பிக்கை இல் லா தீர்மானத்திற் கான மனுவை நகராட்சி ஆணையாளரிடம் வழங்கினர். தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது.
இதில் திமுக உறுப்பினர் வனிதா நெப்போலியன் நகர் மன்ற தலைவராகவும், திமுக உறுப்பினர் சுனோதா செல்வக்குமார் துணை தலைவராகவும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக நகர்மன்ற தலைவருக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும் தீர்மானம் நிறைவேற் றுவதிலும், கூட்டங்கள் நடத்துவதிலும் பிரச்சனைகள் அடிக்கடி வந்து கொண்டு இருந்தது.

கடந்த மாதம் நகர்மன்ற கூட்டம் நடைபெற்ற பொழுது நகர மன்ற தலைவரை கண்டித்து 18 திமுக உறுப்பினர்களும், 6 அதிமுக உறுப்பினர்களும் உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தினார்கள். இந்நிலையில் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி இன்று திமுக உறுப்பினர்கள் 14 பேர்கள், நகராட்சி அலுவலகத்திற்கு வந்து நகர் மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக, 16 திமுக உறுப்பினர்கள் கையெழுத்து இட்ட மனுவை நகராட்சி ஆணையாளரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க கூறினர். இதையடுத்து 6 அதிமுக நகர் மன்ற உறுப்பினர்களும் இதே போல் மனுவை நகராட்சி ஆணையாளரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து நகர்மன்ற உறுப்பி னர்கள் அனைவரும் தேனி மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.

நகர்மன்ற உறுப்பினர்கள் வைக்கப்படும் குற்றச்சாட்டுயாதெனில் நகரில் வார்டு உறுப்பினர்கள் முன் வை க்கும் எவ்வித கோரிக்கைகளும் அதன் சார்ந்த அடிப்படை தேவைகளும் நிறைவேற்றுவதில்லை ஏன் எனக் கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுதல்.
அதிலும் குறிப்பாக தாழ்த் தப்பட்ட பகுதி மக்கள் அதிகம் வசிக்கும் வார்டு பகுதிகளை குறிப்பாக 33-வது வார்டு பகுதியினை நகர் மன்ற தலைவியின் கணவர் தீண்டாமை விடயத்தை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார் எனவும் வேண்டுமென்றே தாழ்த்தப்பட்ட பகுதி மக்கள் அதிகம் நிறைந்த வார்டு பகுதிகளில் அடிப்படை தேவைகளை செய்து கொடுப்பதில்லை என்றும் ஆதிக்க சாதியில் இருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட சாதியினரை தீண்டாமை நோக்கத்தோடு நகரில் நடத்துவதாகவும் குற்றச்சாட்டு.

தலைவியின் கணவரால் நியமிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் தொடர் அராஜகப் போக்கு கடைபிடித்தல்.

மேலும், நகர் மன்றத்தில் தலைவியின் கணவரின் ஆதிக்கத்தால் நகரில் அடிப்படைத் தேவைகள் மக்களது கோரிக்கைகள் குறித்து நகரில் யாராவது முன்வைத்து கேள்வி எழுப்பினால் நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே இவருக்கு என்று இருக்கும் அடியாட்களை வைத்து ஒருமையில் பேசி அடிக்க முற்படுவது நாகூசும் அருவருத்தக்க வார்த்தைகளை பேசி வெளியே விரட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் கம்பம் பகுதியில் கடைகள் வைத்து வியாபாரம் செய்யும் கடைகள் மற்றும் வணிகர்கள் இடத்தில் தங்களது வணிக நிறுவனம் மற்றும் கடைகளை அபிவிருத்தி செய்திடவும், கடைகளை புனரமைக்க வேண்டியும் அதற்கான கட்டிட வேலையை தொடங்கும் முன்பு நகர்மன்ற தலைவியின் கணவர் நெப்போலியன் தனக்கென நியமனம் செய்யப்பட்ட தற்காலிக மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் நகரத் திட்ட அலுவலக உதவியாளர்களை பயன்படுத்தி கட்டப்பஞ்சாயத்து செய்திட மிரட்டும் தோணியில் நோட்டீஸ் அனுப்புகிறார்.

நோட்டீசை பெற்றுக் கொண்டு பயந்து ஒடுங்கி கிடக்கும் வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களை நீங்கள் அண்ணன் நெப்போலியன் பார்த்து விட்டு வரவும் என நகராட்சி நகர உதவி திட்ட அலுவலர் உத்தரவு இடுகிறார்.

கம்பம் நகராட்சி பகுதிகளில் உள்ள வணிகர்கள், கடைகளை மிரட்டி ரூ.3 முதல் 5 இலட்சம் வரை கையூட்டு பெற்று நகர நிர்வாகத்தில் கணிசமான தொகையினை வரவு வைத்து அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுத்துதல்.

அடிப்படை வசதிகளில் வேண்டுமென்றே புறக்கணிக் கப்படும் நகர வார்டு பகுதிகள். தலைவியின் கணவர் அடியாட்களை வைத்து மிரட்டிக்கொண்டு தனது ரத்த சொந்த பந்தங்களுக்கு நகர் மன்ற பணிகளை வாரி வழங்குதல் கேள்வி கேட்டால் ஒருமையில் பேசுவது.

நகர்மன்ற தலைவி, அவரது கணவர் (ம) துணை தலைவி மீது நகர் மன்ற உறுப்பினர்கள் வைக்கப் படும் குற்றச்சாட்டுகளாகும்.

22 வார்டு உறுப்பினர்கள் தலைவர் துணைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றியது கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் தென்பட்டதுடன் பேசும் பொருளாக மாறியது.

ஆக கம்பம் நகராட்சியில் நகர்மன்ற தலைவி வனிதாவின் கணவர் நான்காண்டுகளை தொடர்ந்து நாளுக்கு நாள் மெருகேற்றிய அட்ராசிட்டியை 22 வார்டு உறுப்பினர்களும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிவிட்டனர்.

இருப்பினும் இந்த வார்டு உறுப்பினர்கள் நான்கு ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்தனரா என அப்பகுதி மக்கள் மத்தியில் பரவலாக பேச்சு.

அது சமயம் மாவட்ட ஆட்சியர் கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் இருப்பினும் 22 வார்டு உறுப்பினர்கள் மெஜாரிட்டியுடன் வந்திருந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என கம்பம் நகராட்சி ஆணையாளரை தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியரிடம் தலைவர் துணைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டி மனு அளித்த 22 வார்டு உறுப்பினர்களுக்கு ஆதரவாக செயல்பட போகிறார்களா? மாறாக, ஆளுங்கட்சியினர் “நமக்கேன் வம்பு பின்னாடியே வரும் அம்பு” என ஒடுங்கி நடவடிக்கையில் சுணக்கம் காட்டுவார்களா?

இதே, சாதாரண ரேஷன் கடை பணியாளர் என்றால் உடனே சஸ்பெண்ட் செய்து விடுவார்கள் ஆளுங்கட்சிணர் என்பதால் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..