அரியலூர் மாவட்டத்தில் ராத்திரி நேர முதல்வர் முகாம்!!!

அரியலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணியாற்றும் உதவி திட்ட அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன், மாலை 7.30 மணிக்குப் பிறகும் “ஆய்வுக் கூட்டம்“ என்ற பெயரில் பெண் களை அழைத்து வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தகவலின்படி, ஆண்டிமடம், பலூர், ஜெயங் கொண்டம், திருமானூர், செந்துறை, அரியலூர் ஆகிய ஆறு ஒன்றியங்களில் பணிபுரியும் இளம் பெண்கள் (சுமார் 75% பேர்) இவரது இரவு நேர கூட்டங்களுக்கு அழைக்கப்படுகின்றனர். கூட்டம் என்ற பெயரில், தனி அறையில் அவர்களுடன் சிரித்து பேசியும், தொந்தரவு செய்தும் வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை ஆணையர், மாலை 6 மணிக்குப் பிறகு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தக் கூடாது எனத் தெளிவான சுற்றறிக்கை வெளியிட்டிருந்தும், நந்தகோபால கிருஷ் ணன் அதனை மீறித் திண்டுக்கலிலிருந்து அரியலூருக்கு வந்து, ரூம் எடுத்துத் தங்கி, இரவு நேரத்தில் பெண்களை அழைத்து வரச் செய்வது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல பெண்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது.
மேலும், இவர் எஸ்.வி.எம் திட்டத்தின் கீழ் 71 குப்பை வண்டிகள், பேட்டரி வண்டிகள் மற்றும் டிராக்டர்கள் விநியோகம் செய்ததாகக் கூறி, பல கோடி ரூபாய்களை சனிக்கிழமைகளில் காரில் எடுத்துச் செல்கிறார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி, கழிவறை கட்டும் திட்டம் தொடர்பாக, ஒன்றியங்களில் பணிபுரியும் “டோட்டல் சானிடேஷன் ஒருங்கி ணைப்பாளர்களிடம்“ பட்டியல்கள் தயாரிக்கச் செய்து, கட்டாய நிதி வசூல் செய்து மோசடி செய்வதாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு வார இறுதியிலும், சனிக்கிழமை இரவு இவர் தனது சொந்த ஊருக்குச் செல்லும்போது பல கோடி ரூபாய்களை எடுத்துச் செல்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையென நிரூபிக்கப்பட்டால், அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சீர்குலைவதோடு, பெண்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகும். எனவே, இவரை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இவரைப் பின் தொடர வேண்டும் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்