கரூர் 41 அப்பாவி மக்கள் மரணம் ஏமாற்றப் போகும் அருணாஜெகதீசன் ஆணையம்

அவசர அவசரமாக இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நியமனம் செய்தது பெரிய மோசடிக்குச் சமமானது இதுகுறித்து ஒரு விரிவான அலசலைப் பார்ப்போம்…..
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம்குறித்து விசாரிக்கும் நீதி விசாரணை தலைவராக அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். இந்தத் துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2022, மே 18-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்பித்தது. துப்பாக்கி சூடு சம்பவத்துக்குக் காவல் துறையினர் 17 பேர் முழு பொறுப்பு என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அப்போதைய மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை அதிகாரிகள்மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை அளிக்கப்பட்டது.
இதோ குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் பட்டியல்
1.Shailesh Kumar Yadav, IG
2.Kapil Kumar C. (Saratkar), DIG
3.P. Mahendran, SP (Thoothukudi)
4 Lingathirumaran, DySP
5.Thirumalai, Inspector
6. Hariharan, Inspector
7.Parthiban, Inspector
8.Sornamani, Sub-Inspector
9.Rennes, Sub-Inspector
10. Raja, Constable
11.Shankar, Constable
12.Sudalaikannu, Constable (“ace shooter”)
13.Thandavamurthy, Constable
14.Satheesh Kumar, Constable
15 A. Raja, Constable
16.M. Kannan, Constable
17.Mathivanan, Constable
Shailesh Kumar Yadav, IPS
Shailesh Kumar Yadav, IPS துணை பிரதேச எஐஜி (South Zone) கட்டமைப்பில் இருந்தபோது, சம்பவத்தில் சம்பந்தம் குறித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டவர். Kapil Kumar Saratkar, IPS
நேர்மாற்றமாகத் திருநெல்வேலி பிரதேச துணை இளைய எஐஜி பொறுப்பில் இருந்தவர் என்று அறிமுகமானவர்; அவரும் குற்றம்சாட்டப்பட்ட வரிகளில் உள்ளவர். N. Venkatesh அதிகாரப்பூர்வமாக ஐ.ஏ.எஸ் / மாவட்ட ஆட்சியர் மட்டத்தில் இருந்தவர் என்று ஆணையம் பரிந்துரைகள் விடுத்துள்ளது.
Divisional Excise Officer Chandran அறிக்கையில்  குறிப்பிடப்பட்டு, அவருக்கு உயர் அதிகாரம் (Rule 17B) கீழ் குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டது. Deputy Tahsildar Sekar அதே விதத்தில், கோமிஷன் அறிக்கையில் Sekar மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. Zonal Deputy Tahsildar Kannan என்ற அதிகாரியும் குற்றச்சாட்டுக் பட்டியலில் உள்ளவர். இவர்கள்மீது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று பட்டியல் தர முடியுமா?
துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் இங்குப் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாபஸ் பெற்றார் துப்பாக்கி சூட்டியில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கினார். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளைக் காப்பாற்றி விட்டார் முதல்வர் மு க ஸ்டாலின்போது கரூர் 41 பேர் மரணம் அடைந்தது தொடர்பாக இதே ஆணையத்தை அருணா ஜெகதீசன் சம்பவ நடந்த நாலு நிமிடத்தில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளார் இந்த அறிக்கை என்ன ஆகும் என்று இந்தக் கட்டுரை படிக்கும் மக்களை முடிவு செய்து கொள்ளலாம்.  திமுக, அதிமுக ஆட்சிகள் தொடர்ந்து அதிகாரி களை ஏவி விட்டு அப்பாவி மக்களைக் கொன்று குவித்து விட்டு அதே அதிகாரியின் மீது பழியை தூக்கி போடுகிறது.
பின்பு ஆட்சிக்கு வந்ததும் அந்த அதிகாரிகளைக் காப்பாற்றுகிறது இதுதான் திமுக அதிமுக கட்சிகளின் ஏமாற்று வேலையாகும் இந்தக் கரூர் சம்பவம் இப்படி தான் ஆகப்போகிறது.
எம்ஜிஆர் மீது போடப்பட்ட ரேக்கமிஷன் கருணாநிதி மீது போடப்பட்ட சர்க்காரியா அகம் சன் முதல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்வரை எந்தக் கமிஷனும் தனது வேலையைச் சரியாகச் செய்யவில்லை.  ஒவ்வொரு கமிஷ னுக்கும் 5 கோடி ரூபாய் வரை அரசு பணம் தான் வீணாகச் செலவாகிறது ஆனால் யாரும் தண் டிக்கப்படவில்லை இதோ நாம் கேட்கும் விசாரணை கமிஷன் ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் என்ன ஆனது அம்மையார் ஜெயலலிதா கொலை வழக்கு ஆறுமுகசாமி கமிஷன் என்ன செய்து இப்படி நாம் பட்டியலிட முடியும் கமிஷன் என்பது ஒரு ஏமாற்று வேலை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தச் செய்தி அச்சிப் பிழையில் இருக்கும்போது நடைபெற்றது கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணை செய்யும் என்றும் இதற்கு ஒரு தலைமை நீதிபதி மூன்று அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்தது மேலும் முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டதை ரத்து செய்தது என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
நமது சிறப்பு நிருபர்