தலைவாசல் காவல் துறையினர் சந்துக்கடையை அகற்றியதால் பொதுமக்களின் ராயல் சல்யூட்!

சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் தேவியாக்குறிச்சி கிராமத்தில் சந்து கடைகள் நடத்தி வருவதால் இந்தக் கிராமத்தில் கல்வி நிறுவனங்கள் உள்ளது அரசு பள்ளியும் இயங்கி வருவதால் அங்குச் செல்லும் பெண்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் சுகந்திரமாக நடக்க முடியவில்லை என்றும் கூறி வருகின்றனர்.
அன்றாட கூலி வேலைக்குச் செல்லும் நபர்கள் காலையிலே மது அருந்திவிட்டு செல்வதாலும் இது முற்றிலும் காவல்துறை கட்டுப்பாட்டில் இயங்குவதால் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தத் தகவல் வாட்ஸ் அப்குரூப்பிலும், தளங்களிலும் பகிரப்பட்டதால் உடனடியாகத் தலைவாசல் காவல் துறையினர் துறை ரீதியான நடவடிக்கை எடுத்துச் சந்து கடையை அகற்றப்பட்டது கண்ணியம் கட்டுப்பாடுள்ள காவல்துறை மீது குறை கூறும் சில நபர்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு பாடமாக இருக்கும் எனக் காவல் துறை மத்தியில் பேசப்பட்டு வருகின்றனர்.
மேலும் சமூக ஆர்வலர்களும் மற்றும் பெண்களும் தலைவாசல் காவல்துறையினருக்கு நன்றியைத் தெரிவித்தனர்.
நமது சிறப்பு நிருபர்