கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 15 இலுப்பைக்குளம் மேம்பாடு செய்வதற்கு ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் அம்ருத் திட்டம் 20232024 இன் கீழ் 9 .8. 2024 அன்று இணையதள வாயிலாக ஒப்பந்தம் கோரி 16.8 .2024 அன்று ஒப்பந்தம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இலுப்பை குளம் என்பது சுமார் 5 ஏக்கர் சுற்றளவை கொண்ட நீர் பிடிப்பு பகுதியாகும்.
வீராணம் ஏரியிலிருந்து அரியகோஷ்டி வாய்க்கால் மூலம் குலத்திற்கு நீர் வருகிறது ஒரு முறை குளம் முழு கொள்ளளவை அடைந்தால் சுமார் 11 மாதம் குளத்தில் நீர் இருக்கும். இதனால் ஆதிவராகநத்தம் மேல் புவனகிரி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் என்பது உயர்ந்து ஆழ்துளை கிணறுகள் பைப்புகள் மூலம் உவர்ப்பு நீர் இல்லாமல் சுத்தமான குடிநீர் கிடைத்து வந்தது, கால்நடைகள் வைத்திருப்பவர்களுக்கும் அதிக பயனடைவது வழக்கமாக இருந்து வருகிறது.
சென்ற வருடம் 16.8.2024 அன்று ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் 10 நாட்களில் அரியகோஷ்டி வாய்க்காலிலிருந்து நீர் வரும் கிளை வாய்க்காலில் ஜேசிபி இயந்திரம்மூலம் மண்ணைக் கொட்டி முழுவதும் மூடிவிட்டனர். குளத்தில் நீர் என்பது வற்றிவிட்டது அதன் பின் கடந்த 11 மாதமாக ஒப்பந்த நிறுவனம் எந்த வேலை இணையும் செய்யாமல் இருந்தது ஏன்? வேலையை ஆரம்பிக்காமல் இருக்கிறீர்கள் என்று பேரூராட்சி ஊழியர்களிடம் கேட்டபோது குலத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை வருவாய் துறைமூலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றிய பின்பு வேலை துவங்கப்படும் என்றனர். ஆனால் இதுவரை அளவீடு செய்யாமலேயே வேலை செய்கிறார்கள்.
ஜூலை மாதம் இறுதியில் திடீரென்று ஜேசிபி எந்திரம் குளக்கரையில் உள்ள பொருட்கள் செடிகளை அகற்றி கொண்டுள்ளனர். தற்போது பருவமழை துவங்கி உள்ள நிலையில் 8.9.2025 (ஜிஷீமீ ஷ்ணீறீறீ) என்று சொல்லக்கூடிய இரண்டு அடி உயரம் 1.5 அடி அகலம் கொண்ட தளம் அமைக்கின்ற வேலை ஆரம்பித்துள்ளனர் முதல் நாள் தளம் போட்ட இரவு பெய்த மழையினால் சுவர் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது அவசரகால கெதியில் ஒப்பந்தம் முடிய 10 நாட்களுள்ள நிலையில் வேலை ஆரம்பிப்பதும் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்றாமலும் குலத்தை மேம்படுத்தும் பணி என்பது துவங்கி இருப்பதும் கரைகளை பலப்படுத்தாமல் குளத்தின் தரைத்தளத்தை மட்டும் செய்யாமலும் கண்துடைப்பிற்கு வேலை செய்வது என்பது மக்கள் பணம் ரூபாய் 75 லட்சத்தை வரி சுருட்டுவதற்கு உண்டான செய்யப்பட்டு வருகிறது.
இலுப்பை குளம் மேம்படுத்தும் பணியை மேற் கொள்ள சிதம்பரத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் ஒப்பந்தம் பெற்றுள்ளார். இதனை உள் ஒப்பந்தமாக ஆளும் கட்சியைச் சார்ந்த நிர்வாகி எடுத்துள்ளார். இந்தப் பணி தொடர்பாகப் பேரூராட்சி அதிகாரிகளிடம் எதைக் கேட்டாலும் சரியான பதிலைக் கொடுக்காமல் அச்சத்தோடு ஒப்பந்ததாரர் வேளாண் உழவர் நலத்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர் என்றும் எங்கள் பேச்சைக் கேட்பதில்லை என்றும் நாங்கள் சொல்வதை செய்வதில்லை என்றும் புலம்புகிறார்கள். இந்தப் பணி என்பது எதிர்காலத்தில் முழுவதும் முடிக்கப்படுமா என்றும் மலையைக் காரணம் காட்டி பணியை முடிக்காமல் ஒப்பந்த பணம் முழுவதும் அதிகாரிகளின் ஆதரவோடு சுருட்டப்படுமா என்றும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே பணியினை தரமாகவும் முழுமை யாகவும் முடிப்பதற்கு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட ஆவணம் செய்திட வேண்டுமென்று பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர் கள் கோரிக்கை வைக்கின்றார்கள்.
இது சம்பந்தமாக வில்வாய்ஸ் செய்தி குழுப் பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் விசாரித்தபோது சரியான பதில் அளிக்கவில்லை ஆளுங்கட்சி அமைச்சரின் ஆதரவாளர் என்பதால் அதிகாரிகள் உண்மையைச் சொல்லத் தயங்குவதாகப் பெயர் வெளியிட விரும்பாத அலுவலர்கள் தெரிவித்தனர். எங்களை இதில் மாட்டி விடாதீர்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டனர். இதில் ஹைலைட் என்னவென்றால் பேரூராட்சி பெயர் பலகை கூட இன்னும் வைக்கவில்லை. “காசுல்லப்பா” என்ற டயலாக் கேட்க முடிந்தது.
2026 தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இவர்கள் இப்படி பொறுப்பு இல்லாமல் நடந்து கொள்ளுவது நிச்சயம் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. மக்களுக்கு இப்போது எல்லா விஷயங்களும் உள்ளங்கையில் நெல்லிக்கனி போல் உலகமே பாக்கெட்டில் வந்து விட்டது, சோசியல் மீடியா மூலம் உடனுக்குடன் தெரிந்து விடுகிறது.
