ஒட்டன்சத்திரம் போலியாவணங்கள் மூலம் பத்திரப்பதிவு ரூ.20 லட்சம் லஞ்சம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிராமத்திற்கு கட்டுப்பட்ட வாகனம் பட்டி பகுதியில் 1952 ஆம் வருடம் குப்பன கவுண்டர் நீதிமன்றம் ஏலத்தின் மூலம் சுமார் 83 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி தற்போது வரை வாரிசுகளான 12 நபர்கள் அனுபவித்து வரும் நிலையில் கலந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு இதே பகுதியைச் சேர்ந்த ஒட்டச்சத்திரம் இரண்டாவது வார்டு திமுக கவுன்சிலர் கணவர் நாட்ராயன் போலி ஆவணங்கள் தயார் செய்து பல கோடி மதிப்புள்ள 83 சென்ட் நிலத்தை அபகரிக்கும் நோக்குடன் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆதரவோடு வாரிசுச் சான்றிதழ் பெற்று பத்திரப்பதிவு செய்ய முயன்ற நிலையில் சம்பந்தப்பட்ட நபர்கள் புகார் அளித்து நாட்ராயன் போலியாக வாரிசுச் சான்றிதழ் பெற்றதை வட்டாட்சியர் ரத்து செய்வதாகவும் நிலத்தின் உரிமையாளர்களின் ஒருவரான நல்லு சாமியிடம் கொடுத்துள்ளனர்.

போலி ஆவணங்கள்மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ய முயற்சித்த திமுக கவுன்சிலர்மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் திமுக கவுன்சிலர் தனது அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகாரம் மற்றும் பணம் பலத்தை வைத்து ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சஞ்சய் காந்தி மூலம் போலி வாரிசுச் சான்றிதழ் வாங்கி போலியாவணம் தயார் செய்து 4/9/2025 அன்று ஒட்டன்சத்திரம் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்துள்ளார்.
பத்திரப்பதிவு தெரிந்து நல்லசாமி மற்றும் 12 வாரிசுகளும் நேரடியாகச் சென்று பத்திரப்பதிவுத்துறை அதிகாரியிடம் தங்களது சொத்தில் யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது போலி ஆவணங்கள் வைத்துப் பத்திரப்பதிவு செய்துள்ளதாகப் புகார் கொடுத்த நில உரிமையாளர் அடியாட்களை வைத்து மிரட்டி அங்கிருந்து துரத்தியதாகவும் இதை எடுத்து நல்லுசாமி உள்ளிட்ட 12 வாரிசுகளும் ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் வட்டாட்சியர், திண்டுக்கல் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கடந்த நான்கு மாதங்களாகத் தொடர்ந்து அனைத்து அதிகாரிகளிடமும் புகார் அளித்து வருகிறோம். ஆனால் அரசு அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் திமுக கவுன்சிலருக்கு ஆதரவாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதால் விவசாயிகள் நிலை என்ன? எங்களது 20 கோடி ரூபாய் சொத்தை அபகரித்து வரும் திமுக நபர்மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் 15 குடும்பமும் தீக்குளிப்பதை தவிர வேறு வழி இல்லையெனக் கண்ணீர் மல்க நல்லுசாமி கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.

எது எப்படியோ சாமானிய ஏழை எளிய விவசாயிகள் வைத்திருக்கும் பல கோடி மதிப்புள்ள நிலங்களை வியாபார நோக்கத்துடன் ஒரு சிலர் தங்களுடைய சுயலாபத்துக்காக வருவாய்த்துறை மற்றும் பத்திரப்பதிவு அலுவலங்களில் பல லட்சம் ரூபாய்களை லஞ்சமாகக் கொடுத்துப் போலி ஆவணங்களைத் தயாரித்து இடங்களை அபகரித்து வருவதாகத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் கொடுத்து வரும் நிலையில் போலி ஆவணங்கள்மூலம் நிலத்தை அபகரித்த நபர்கள்மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதும் ஆனால் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் போலியாவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் வைத்திருப்பதை மீட்டு அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் ஆக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட வாரிசுச் சான்றிதழ் உண்மையானதா போலியானதா என்றும் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு வழங்கி ஆவணங்கள் போலியா உண்மையா எனச் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அது மட்டுமில்லாமல் விசாரணையில் போலி ஆவணங்கள்மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தால் இதற்கு உடந்தையாக இருந்த வருவாய் துறை பத்திரப்பதிவு துறை அதிகாரிகள்மீது துரைரீதியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.