அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் குடியிருப்பவர் சங்க பொதுமக்கள் பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது
அரியலூர் நகராட்சிக்குச் சொந் தமான பெரியார் நகர் தெரு 1 முதல் 5 வரையிலான குடியிருப் போர்களின் குடும்பங்கள் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகி றார்கள்.
அத்துடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் பங்களா வழியாக விளையாட்டு மைதானம் மற்றும் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் குறுக்கு சாலை உள்ளது இந்தச் சாலையில் 15 வீடு கூட இல்லாத நிலையில் கார் ஏதாவது சென்றால் பக்கவாட்டில் கிடு கிடு கூவ மாட்டைவிட மோசமாகப் பாதாள சாக்கடை ஓடிக்கொண்டே இருக்கிறது
கார் எதிரே வந்தால் இருசக்கர வாகனங்கள் அதில் விழுந்து தினசரி மருத்துவமனைக்குச் சென்றவண்ணம் உள்ளார்கள் அதே போன்று ஜே ஜே என் திட்டத்தில் ஓர் ஆண்டுக்கு முன் பைப் லைன் பறிக்கப்பட்டு சேலைகள் எல்லாம் பாழடைத்து அதைப் பொறுத்து வண்ணம் ஒரு கருப்பு பெட்டியைக் கொண்டாந்து வைத்துவிட்டு சென்று விட்டார்கள். ஓராண்டுக்கு மேலாகியும் குடிநீர் சப்ளை வழங்க வில்லை 10 அடி ஆழத்தில் பறிக்கப்பட்டு பொதுமக்கள் முதியோர்கள், உடல் நலம் சரியில்லாதவர்கள் இறங்கி பிடிக்க மிகவும் அவஸ்தைபடுகிறார்கள் குடி தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது அத்துடன் ஒரு சின்ன மழை பெய்தால் கூடப் புகைப்படத்தில் காணுமாறு நடந்து கூடச் செல்ல முடியாது அவல நிலை இதற்கு நிர்வாக நிதி ஓராண்டுக்கு முன் வரப்பட்டு இரண்டு மாதத்திற்கு முன்னர் பூமி பூஜை போடப்பட்டு கிடப்பில் கிடப்பதால் குடியிருப்பு வாசிகள் மிகவும் தினசரி விழுந்து எழுந்து மருத்துவமனைக்குச் செல்லும் வனம் உள்ளார்கள்.
இதுகுறித்து அனைவரும் தங்களிடம் சொல் வதற்கு பெரும்பாலானோர் அரசு துறையிலும் நிறுவனங்களிலும் பணிபுரியும் குடும்பங்களாக இருப்பதால் சொல்லுவதற்கு தயக்கம் அடைந்து மன உருக்கத்தில் உள்ளார்கள் இதுகுறித்து ஏற்கனவே செய்தித்தார்கள் மற்றும் மனுக்கள் உங்களுடன் முதல்வர் திட்டத்தில் மனுக்கள் இது போன்று பல கோரிக்கை விண்ணப்பங்களை அளித்து ஒருமுறை கூட முனிசிபாலிட்டி ஆணையர் முழுவதுமாக வருகை தந்து பார்வையிடாமல் வரிப்பணம் செலுத்த ஆள் அனுப்பி வைக்கிறார் இதுவரை பெற்ற வீட்டு வரிகள், குடிநீர் வரி, பாதாள சாக்கடைவரி, வரைபட அனுமதி வரி, சொத்து வரி கடை வசூல் இதெல்லாம் கணக்கு பார்த்தாலே பெரியார் நகரை பொறுத்தவரை ஒரு வீட்டிற்கு வருடத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வரையும் பாதாள சாக்கடைக்கு குடிநீருக்கு என ஒரு வீட்டுக்காரர் 35 ஆயிரம் ரூபாய் செலுத்தி வரும் நிலையில் எங்கே போச்சு என்பது தெரியவில்லை ஐயா அவர்கள் இதைத் தணிக்கை செய்து முனிசிபாலிட்டி அவர்களுக்குப் பார்வையிட்டு எது முக்கியமாகச் செய்ய வேண்டும் என்பது இந்தப் புகைப்படம் எடுத்துள்ளேன் அதை ஆய்வு செய்து உடனடியாகச் சரி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இப்பொழுது செந்துறை காலேஜ் ரோட்டில் உள்ள கடைக்காரர்கள் மூன்று நாள் கழித்த இலைகளைக் குறுக்கு வழிச்சாலையில் கொட்டப்பட்டு அது விஷத்தன்மை அடைந்து நாய்கள் சாப்பிட்டு தினசரி செத்த வண்ணம் உள்ளது. இதையும் நேரா வந்து யாரும் பார்ப்பதில்லை இதைச் சொல்லி அழுத்தம் போய்விட்டது ஐயா அவர்கள் இதற்குத் தக்க நடவடிக்கை மேற்கொள்ள ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
பெரியார் நகர்
குடியிருப்பு வாசிகள் சங்கம்
