சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிகளில் மல்லியகரை சொக்கநாதபுரம், இடி மின் னல் ஏரி, கல்பனூர் ஏரி, அய்யனார் ஏரி துலக்கனூர் ஏரி இன்னும் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏரிகளில், ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த துரை என்பவர் ஆத்தூரில் பணிபுரியும் அரசு அதிகாரிகளைச் சட்டை பையில் வைத்துக் கொண்டு தினந்தோறும் நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கொள்ளையடித்து, டிப்பர் லாரி ஒன்றுக்கு ரூபாய் 5000 விற்பனை செய்ததாகவும் எத்தனை புகார் கொடுத்தாலும் என்மீது வழக்கு போடமாட்டார்கள் எனது வண்டியும் பிடிக்க முடியாது உயர் அதிகாரிகள்வரை லஞ்சம் தருவதாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திமிராகப் பேசி வருகிறாராம்.
அதேபோல் அப்பகுதி பொதுமக்கள் வண்டியை மறித்து எதற்காகக் கனிம வளங்களைக் கொள்ளையடிக்கிறீர்கள் என்று கேட்டால் துரை என்பவர் அப்பகு தியில் உள்ள ரவுடிகளை வைத்து மிரட் டியும் எனக்குப் பின்னால் மிகப்பெரிய ஆட்கள் உள்ளனர் என்னை ஒன்னும் செய்ய முடியாது என்று மிரட்டி அனுப்பி விடுகிறாராம்.
அதேபோல் பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குமுறல் துரை என்பவர்மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அவருக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருவதால் கனிம வளங்களைக் கொள்ளையடித்து அவர் பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறாராம்.
இவர் சம்பாதித்தால் அதி காரிகளுக்கும் சரி பாதி என்று பொதுமக்கள் பேசி வருகிறார் களாம். அதேபோல் புகாரின் பேரிலோ, தகவலின் பெயரிலோ புகார் கொடுத்தாலும் இவர்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் துரை என்பவரைக் காப்பாற்றும் நோக்கில் அதி காரிகள் செயல்படுவதாகப் பொது மக்கள் குற்றச்சாட்டு. உடனடியாகச் சம்பந்தப்பட்ட துறைரீதியான அதிகாரிகள் ஓம் சக்தி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் துரை மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தும் அவரது ஹிட் டாச்சி ஜேசிபி அவரது ட்ரான்ஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்வார்களா என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்க குற்றம் சாட்டி நடவடிக்கை பாயுமா?
பொது மக்களின் காத்திருப்பு தீருமா?
