திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாரம்பரிய குடும்பத்தினைச் சேர்ந்தவனாகிய தலைமுறைகளில் முதன்முறையாக நான். மூன்று கழகத்தில் பொறுப்பினைப் பெற்றவனாவேன்.
பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலம் முதல் கழகப் பணியில் ஈடுபாட்டுடன் இருந்து வந்தநான், 2006 முதல் முழுநேர கழகப் பணியில் ஈடுபட்டு. அன்றுமுதல் இன்றுவரை அர்ப்பணிப்புடன் கழகப் பணியாற்றி வருவதை, தேனி மாவட்டத்தில் உள்ள கழக உடன்பிறப்புகள் அனைவரும் அறிவர்.
கழக தலைமை அறிவித்த அனைத்து ஆர்ப்பாட்டங்கள். போராட்டங்கள், உள்ளிட்ட அனைத்திலும் தவறாது கலந்து கொண்டு கைதாகியுள்ளேன். அதுசார்ந்த வழக்குகளுக்கு இந்தநாள் வரை நீதிமன்றம் சென்று வருகிறேன். என்னுடைய திருமண நாள், பிறந்தநாள், குழந்தைகளுக்கு விசேச நாட்கள் என அனைத்து முக்கிய தினங்களிலும், கட்சிக்காகக் கைதாகி, குடும்பத்தினரை பிரிந்து தான் இருந்துள்ளேன்.
கட்சிக்காகக் காலங்களை, பொருளாதாரங்களை நிறைய இழந்துவிட்டேன். எதிர்கட்சிகளிடத்திலும், உட்கட்சிக்குள்ளேயும் பகைகளைத்தான் சம்பாதித் துள்ளேன். ஆயினும் என்னுடைய கழகப் பணியில் இதுநாள்வரை ஒரு சிறு தொய்வு கூட இருந்ததில்லை. இதனைத் தேனி வடக்கு, தெற்கு மாவட்டத்தில் உள்ள கட்சியினர் அனைவரும் நன்கு அறிவர். அதற்குச் சான்று கழக தலைவர், மாண்புமிகு தளபதியார் அவர்களின் தலைமையில் ஒருங்கிணைந்த கம்பம் நகர் கழக இளைஞரணி அமைப்பாளராகப் பணியாற்றியபோது, 2013ஆம் ஆண்டு, ஜூலை மாதம் தேனி மாவட்டத்திற்கு கள ஆய்விற்கு வருகை புரிந்தபோது, தமிழ்நாட்டிலேயே சிறந்த நகர் இளைஞரணி அமைப்பாளர் என்று. தளபதியாரின் பொற்கரங்களால் என்னுடைய மினிட் புத்தகத்தில் கையொப்பம் பெற்றுள்ளேன். அதே போன்று இன்று தேனி தெற்கு மாவட்டக் கழக இளைஞரணி துணை அமைப்பாளராகப் பொறுப்பேற்று பணியாற்றி வருகின்ற வேளையில், மாண்புமிகு. சின்னவர் அவர்கள் சென்னை குறிஞ்சி இல்லத்தில் மேற்கொண்ட கள ஆய்வின் போதும், என்னுடைய கழகப் பணிகளைப் பாராட்டி மினிட் புத்தகத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில், இதுநாள்வரை கழகத்தின் மூலமாகவும், கழக ஆட்சியின் மூலமாகவும் எந்தவொரு உதவியும் நான் பெற்றதில்லை. என்னுடைய குடும்பத்தில் எனது மனைவி, எங்களது இரண்டு குழந்தைகளும், வயதான என் பெற்றோர்களும் என்னுடன் வசித்து வருகின்றனர். முதன் முறையாக என்னுடைய குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி என்னுடைய மனைவிக்கு அரசு வேலை பெற்றிட வேண்டுமெனக் கருதி அதற்கான முயற்சியினை மேற்கொண்டேன். அதனடிப்படையில் 2009 முதல் கழகத்தில் எனக்கு நன்கு தெரிந்த, தற்போதைய கம்பம் சட்டமன்ற உறுப்பினரும், தேனி தெற்கு மாவட்டக கழகச் செயலாளரின் நேர்முக உதவியாளருமான திரு.நந்தபாலன் என்பவர் என்னுடைய எண்ணத்தினை தெரிந்து கொண்டு என்னை அணுகினார். நானும் அவரிடம் வேலை சம்மந்தமாகக் கோரிக்கை வைத்தேன். காலி பணியிடங்கள்குறித்து நானும் விசாரிக்கிறேன். நீங்களும் விசாரியுங்கள் என்று கூறினார். நானும் பின்பு இரண்டு நாட்கள் கழித்து தேனி தெற்கு மாவட்டச் செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய கம்பம் நா.இராமகிருஷ்ணன் அவர்களிடம் மனு கொடுக்கச் சொன்னார். நானும் நேரில் சென்று, கம்பம் வடக்கு நகர் கழகச் செயலாளர் திரு.வீரபாண்டியன் அவர்களின் முன்னிலையில் மனு கொடுத்துவிட்டு வந்தேன். பின்பு மாவட்டச் செயலாளர் வேலைகுறித்து என்னிடம் செய்து தருகிறேன் என்ற வாக்குறுதி அளித்ததை கேட்டுத் தெரிந்து கொண்ட பின்பு, என்னிடம் முன்பணமாக ரூ.500000 (ரூ.ஐந்துஇலட்சம்) ஒன்றிய, நகர நிர்வாகத்திடம் கொடுத்து உறுதிபடுத்த வேண்டுமெனக் கூறி கேட்டார். நான் அக்கவுண்டில் போட்டு விடுவதாகக் கூறினேன். ஆனால் அவரோ வேண்டாம் அரசு சார்ந்த பணி, பின்னால் பிரச்சினை ஆகி விடும். ஆகையால் கையிலேயே தாருங்கள் எனக் கூறி பணத்தினை பெற்றுக் கொண்டார்.
அதன்பின்பு ஒரு வாரம் கழித்து, இரண்டாவது தவணையாக நிர்வாக அதிகாரிகளுக்குக் கொடுக்க வேண்டுமெனக் கூறி ரூ.500000 (ரூ.ஐந்து இலட்சம்) வாங்கினார். பத்து நாட்கள் கழித்து, மூன்றாம் தவணையாக மாவட்டச் செயலாளர் மூலமாகக் கட்சி நிர்வாகத்திற்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறி ரூ.600000 (ரூ.ஆறு இலட்சம்) வாங்கினார். அதன்பின்பு சில நாட்கள் கழித்து சென்னை செல்கிறேன், தலைமை கழக ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டுமெனக் கூறி, இரண்டு இலட்சம் கேட்டுப் பின்பு ரூ. ரூ.1,50000 (ரூ.ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்) என்னிடம் வாங்கி கொண்டு சென்றார். தேனி தெற்கு மாவட்டச் செயலாளரிடமோ, கம்பம் நகரின் இரண்டு செயலாளர்களிடமோ, மாவட்டச் செயலாளரின் உதவியாளர் திரு.முருகனிடமோ, யாரிடமும் இதுபற்றிக் கேட்டுக்கவோ, பேசிக்கவோ வேண்டாம் என்றும், தெரிந்தால் மாவட்டச் செயலாளர் சார் சங்கப்படுவார் என்றும் என்னிடம் கூறியதால், நானும் வேலை பற்றியும், பணம் கொடுத்தது பற்றியும் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை. மாதங்கள் கடந்தன, மற்ற வேலை வாய்ப்புகள் எல்லாம் நிரப்பப்பட்டு வருகின்ற நேரத்தில், நான் கேட்டிருந்த வேலைகுறித்து கேட்டபொழுது, கொஞ்சம் பொறுமையாக இருங்க சார், அவசரப்படாதீங்க சார், ஓர்க் போய்க்கொண்டிருக்கிறது என்று கூறிக் கொண்டே காலம் தாழ்த்தி வந்தார். நந்தபாலனும் நானும் அடிக்கடி சந்திக்கும் கம்பம் அவுட்டரில் உள்ள டீக்கடையில் கடைசியாகச் சந்தித்து கேட்டபோது, சற்று திமிராக மெத்தனமாகப் பதிலளித்தார். மேலும் டிசம்பருக்குள் எல்லா டிபார்ட்மெண்ட்டிலும் போஸ்டிங் போட்டு முடித்து விடுவார்கள். அதுவரை பொறுமை காக்க கூறினார். மேலும் வேலை தாமதம் ஆனாலும், அடுத்ததும் திமுக ஆட்சிதான், பண்பாளர் சார் தான் எம்.எல்.ஏ. அமைச்சர் ஆவதற்கும் வாய்ப்பு அதிகம். ஆகவே நல்ல போஸ்டிங் உறுதி கவலைப்படாதீங்க சார் என்று கூறினார். கம்பம் ஒன்றிய யூனியன் அலுவலகத்தில் ஒரு காலி பணியிடம் உள்ளதென்றும், ஆனால் அது ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி என்பதால் முடியாதென்றும், சின்னமனூர் ஒன்றியத்தில் ஏற்கனவே குரு.இளங்கோ அவர்களின் மகன் பணியாற்றி வருவதாகவும் அவரையே நியமிக்கப் போவதாகவும் கூறினார்.உத்தமபாளையம் ஒன்றியத்தில் வேண்டுமானால் கேட்டுப்பார்க்கலாம் நீங்கள் ஒன்றிய செயலாளர் அணைப்பட்டி வேண்டுமானால் முருகேசனிடம் பேசுங்கள் நானும் பேசுகிறேன் என்றார். இதனால் நந்தபாலன் மீது எனக்குச் சந்தேகம் வந்தது. மேலும் பல பேரிடம் 2%, 5%க்கு வட்டிக்கு வாங்கி தான். வேலைக்காகப் பணம்கொடுத்திருந்தேன். அதனால் அதுவரை பொறுமை காக்க முடியாதென்பதால் அவரிடம் நான் பணத்தினை திரும்பக் கேட்டேன். மழுப்பலாகப் பதில் அளித்தார். எல்லோரிடமும் வேலைக்காகப் பணத்தினை பிரித்துக் கொடுத்தாச்சு. இனி அவர்களிடம் வாங்க முடியாது. அப்படியே வாங்கினாலும் கொடுத்த பணத்தினை முழுமையாக வாங்க முடியாது என்று கூறினார். கடைசியில் நான் கோபமாகத் திட்டி அழுத்திக் கேட்டதும், உங்களால் முடிந்ததை பார்த்துக்கோங்க சார், நானும் பார்த்துக்கிறேன் சார் என்று கூறிவிட்டு பைக்கில் சென்றுவிட்டார். இதுகுறித்து மாவட்டச் செயலாளரைச் சந்திக்க பலமுறை முயற்சி செய்தேன், அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் தொடர் கட்சி நிகழ்ச்சி, சென்னை நிகழ்ச்சியெனப் பிஸியாக இருப்பதாகக் கூறி வாய்ப்பை மறுத்துவிட்டனர்.கடந்த நான்கைந்து நாட்களாகத் திமுக வாட்ஸ்அப் குரூப்புகளில் நந்தபாலன் குறித்து மேற்கோள் காட்டியும், திட்டியும், மேலோட்டமாகச் சில பதிவுகளையும் போட்டேன். அப்படியாவது அசிங்கத்திற்கு அஞ்சிப் பணத்தினை திரும்பத் தருவார் அல்லது வேலைக்கு ஏற்பாடு செய்வாரென எதிர்பார்த்தேன். ஆனால் கம்பம் வடக்கு நகர் கழகச் செயலாளரிடம் இதுகுறித்து இந்த ஒருமுறை பொறுத்துக் கொள்ள சொல்லுங்கள் என்றும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் மாவட்டச் செயலாளர் கலெக்டரிடம் பேசி வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவாரென நந்தபாலன் கூறியதாகக் கம்பம் வடக்கு நகர் கழக செயலாளா வீரபாண்டியன் என்னிடம் அலைபேசியில் தெரிவித்தார். இதுகுறித்து என்னுடைய வீட்டிலும் வந்து பேசுவதாகத் தெரிவித்தார்.
நான் வேண்டாமென்று மறுத்துவிட்டேன். நான் வேலைக்காக நந்தபாலனிடம் பணம் கொடுத்த விசயம் கம்பம் வடக்கு, தெற்கு நகர் கழகச் செயலாளர்களுக்குத் தெரியாதென்பதால், நான் அவர்களைச் சிரமப்படுத்த விரும்பவில்லை.தேனி தெற்கு மாவட்டச் செயலாளர், கம்பம் சட்டமன்ற உறுப்பினரின் பி.ஏ. மற்றும் ஏற்கனவே ஒருமுறை கம்பம் வடக்கு நகர் கழகச் செயலாளர் பதவிக்காக என்னிடம் ரூ.500000 வாங்கி அது நடக்கவில்லை. வாய்ப்பு இல்லை என்றுதும் என்னிடம் பணத்தை திரும்பக் கொடுத்தவர் என்ற நம்பிக்கையில் நல்லது செய்வார் என்று நம்பி பணம் கடன் வாங்கி கொடுத்தேன். ஆனால் அவர் என்னைத் திட்டமிட்டு ஏமாற்றிவிட்டார். மாவட்டச் செயலாளர்மூலம் என்னைக் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கி விடுவதாகவும் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி என்மீது பொய் வழக்கு போடப்போவதாகவும் மிரட்டி வருகிறார்.தயவுசெய்து எனது பணம் ரூ.17 இலட்சத்து 50ஆயிரம் ரூபாயினை நந்தபாலனிடமிருந்து எனக்குப் பெற்று தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். வட்டிக்கு மேல் வட்டி கட்டி நான் மிகவும் நொந்து போயுள்ளேன். தயவுசெய்து உரிய விசாரணை செய்து வேலைக்காக நான் கொடுத்த பணத்தினை திரும்பப் பெற்றுத் தாருங்கள். இல்லையென்றால் விசம் குடித்து தற்கொலை செய்துகொண்டு சாவதை தவிர எனக்கும், என் குடும்பத்தாருக்கும் வேறு வழியில்லை என்பதனை கண்ணீருடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
இதுநாள் வரை நான் கழகத்தில் பணியாற்றி வந்த பொறுப்புகள்
2002 முதல் இன்று வரை திமுக இளைஞரணி உறுப்பினர்.
2006 முதல் இன்றுவரை கழக அடிப்படை உறுப்பினர்.
(2006 சட்டமன்ற தேர்தல் முதல் அனைத்து உள்ளாட்சி தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள், சட்டமன்ற தேர்தல்கள் அனைத்து இடைத்தேர்தல்கள் என ஒவ்வொரு தேர்தல்களிலும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளேன்).2012 முதல் 2017வரை ஒருங்கிணைந்த கம்பம் நகர் கழக இளைஞரணி அமைப்பாளர்.
2015 முதல் 2020 வரை ஒருங்கிணைந்த கம்பம் நகர் கழக துணைச் செயலாளர். (இரண்டு முறை கழக உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டுள்ளேன்.)
2020முதல் 2021 வரை கம்பம் வடக்கு நகர் பொறுப்புக்குழு உறுப்பினர்
2022 முதல் இன்று வரை கம்பம் வடக்கு நகர் கழகத் துணைச் செயலாளர்
2022 முதல் இன்று வரை தேனி தெற்கு மாவட்டக் கழக இளைஞரணி துணை அமைப்பாளர்.
