சீர்காழியில் போலி பத்திரப்பதிவு செய்ய வேண்டுமா சார்பதிவாளர் ஸ்டீபன் ஆரோக்கியராஜை அணுகவும்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கொள்ளிடம், சார்பதிவாளராகப் பணிபுரியும் ஸ்டீபன் ஆரோக்கியராஜ் என்பவர் இவர்மீது அப்பகுதி பல குற்றச்சாட்டுகள் சமூக ஆர்வலர்களால் கூறப்படுகிறது. இவர் சார்பதிவாளராகப் பொறுப்பேற்ற பின் பலகோடி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்பகுதியில் உள்ள அரசியல் செல்வாக்கு படைத்த ரியல் எஸ்டேட் அதிபர்களையும், தொழிலதிபர்களையும், தன் கைக்குள் வைத்துக்கொண்டு, முறையற்ற ஆவணங்கள் மற்றும் வாரிசு, அல்லாத சொத்துக்களை, போலி பட்டா சொத்துக்களை எவ்வித ஆய்வு செய்யாமல் லஞ்சம் பெற்றுக்கொண்டு, பத்திரப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் கொள்ளிடம் புதூரில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் தனி நபர்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாகச் சுமார் ஏழு கடைகள், ஹோட்டல், மளிகை கடை, பெட்டிக்கடையென அவரவர் கட்டிக்கொண்டு வியாபாரம் நடத்தி வருகின்றனர்.

அந்த இடம் சுமார் மூன்று கோடிவரை விலை போகுமாம் அந்த இடத்தை அதே இடத்தில் கடை வைத்து நடத்தி வரும் சந்தானம் என்பவர் பெயரில், பத்திர எழுத்து கண்ணபிரான் போலி ஆவணங்கள் தயாரித்து, அதனைப் பத்திரப்பதிவு செய்து கொடுக்க, சார்படிவாளர் ஸ்டீபன் ஆரோக்கியராஜிடம் 20 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, போலி பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
இதேபோல் அதே போலத்தூரைச் சேர்ந்த, அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற முதியவர் ஒருவர் தன் சொத்தில் ஒரு பங்கைத் தன் மகனின் பெயரில் செட்டில்மெண்ட் பத்திரம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

இவரது மகன் இறந்து விடவே, அந்தச் செட்டில்மெண்ட் பத்திரப்பதிவை ரத்து செய்துவிட்டு, அதன் நகலைச் சார் பதிவாளர் ஸ்டீபன் ஆரோக்கியராஜ் அனுப்பியும் வைத்துள்ளார் ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத சார்பதிவாளர், அந்த முதியவரின் மருமகளிடம் சில லட்சங்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். தற்போது, அதே கொள்ளிடம் பகுதியில் உள்ள கடைக்கண் விநாயகர் நல்லூரில், சுமார் ஒரு ஏக்கரை வாரிசுத்தார் இல்லாமலேயே, ஒரு தொழிலதிபர் ஒருவருக்கு இடைத்தரகர்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து கொடுத்து விட்டதாகவும், இதனால் சொத்துக்குச் சொந்தக்காரர்களும், அதனால் பாதிக்கப்பட்டவர்களும், சேர்ந்து கொள்ளிட சார்பதிவாளர் அலுவலகத்தில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி வட்டாட்சியர் மற்றும் சீர்காழி காவல்துறை டிஎஸ்பி ஆகியோர் வந்து சமாதானம் செய்தபின்னர் போராட்டத்தின் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பின்பு பாதிக்கப்பட்டுர் மயிலாடுதுறை மாவட்ட பதிவாளர் இடம் புகார் மனு கொடுத்துள்ளதாகவும், புகார்மீது நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட பதிவாளர் கூறியதாவது, ஆகவும் தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் சார்பதிவாளர் ஸ்டீபன் ஆரோக்கி யராஜ் குறைந்த அளவு பணத்தை நேரடியாக வாங்க மாட்டாராம். அப்பகுதியில் பத்திரப்பதிவு அச்சடிக்கும் ஒரு கடையும் உரிமையாளர் மூலமாகத் தான் பணத்தை பெறுவாராம். வசூலிக்கும் லஞ்ச பணம் எனக்கு மட்டுமில்லை மாவட்ட பதிவாளர் முதலமைச்சர் ஊட்டி வரை கொடுக்க வேண்டும்“ எனவும் கூறுகிறாராம். இது சம்பந்தமாக மயிலாடுதுறை மாவட்ட பதிவாளரைத் தொடர்பு கொண்ட இது சம்பந்தமாக மயிலாடுதுறை மாவட்ட பதிவாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஸ்டீபன் ஆரோக்கியராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பட்டா வாரிசு இவையெல்லாம் உண்மை தன்மை கண்டறிய ஆய்வு செய்யக் கூறியிருப்பதாகவும், உண்மை தன்மை அறிந்த பின்பு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும், என்று நம்மிடம் கூறினார்.

இருப்பினும் இதனை முழுமையாக விசாரிக்க அரசு, சிபிஐடி-க்கு, உத்தரவிட்டால் பல கோடிக்கு முறையற்ற பத்திரப்பதிவு சொத்துக்களை பத்திரப்பதிவு செய்தவர்களும், பல முக்கிய புள்ளிகளும் சிக்குவார்கள் எனக் கூறுகின்றனர் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.