கோவை நகரில் ஒரு பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர் மூன்று நபர்கள். அவர்களைத் துப்பாக்கி முனையில் பிடித்தார்கள் காவலர்கள் உண்மையிலேயே பெரிய சல்யூட் காவலர்களுக்கு.
பிடிப்பற்ற குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் தமிழக அரசு செய்யுமா என்று பார்ப்போம்.
பொள்ளாச்சி சம்பவத்தில் இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குண் டாஸ் ஏன் போடவில்லை?
குற்றம் சாட்டப்பட்ட ஏழு நபர்களில் நான்கு நபர்கள் தெலுங்கர்கள் என்பதால் இதை அப்படியே விட்டுவிட்டார்கள்.
இந்தச் சம்பவம் நடைபெற்றபோது தயோதியொன்று குதித்தார்கள் மு.க.ஸ்டாலினும், கனிமொழியும் அதற்குப் பிறகு அதை மறந்து விட்டார்கள்.
இப்போது சமீபத்தில் நடந்த திருவண்ணாமலை கோவிலுக்கு வந்த ஆந்திராவைச் சேர்ந்த பெண் ணை இரண்டு காவலர்கள் பாலியல் பலாத்காரம் செய்தார்கள். அந்த இரண்டு காவலர்களை என்ன செய்தீர்கள்? முதலில் அவர்களைப் பணிநீக்கம் செய்தீர்கள், பிறகு கைது செய்தீர்கள், அதற்குப் பிறகு நிரந்தர பணி நீக்கம் செய்தீர்கள், கடைசியாகக் குண்டாஸில் போட்டீர்கள்.
காவலர்களையே குண்டாஸில் போட்டது நல்ல வரவேற்பு, அதேபோல் கோயம்புத்தூரில் நடந்த சம்பவத்திற்கு செய்வீர்களா? பொள்ளாச்சிக்கு செய்வீர்களா?
ஏன் இந்த இரட்டை வேடம் முதல்வர் அவர்களே பதில் சொல்லுங்கள் தமிழ்நாட்டு காவலர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆந்திராவிலிருந்து உங்களுக்கு நெருக்கடி வந்ததா இந்தக் காவலர்கள் உங்க காவலர்கள் தானே நீங்கள் என்ன ஆட்சி நடத்துறீர்கள்.
கோவை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரின் மீது பல வழக்குகள் இருக்கிறது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ன ஆட்சி செய்கிறீர்கள்?
உடனடியாக இவர்கள்மீது குண்டாஸ் போட வேண்டும். உங்களால் முடியுமா? இதைச் செய்வீர்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
