தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரே விடயம் கேஎன் நேருவின் ஊழல் ஊழலை வைத்து கே என் நேருவின் அரசியல் அடித்தளத்தை ஆட்டவோ, அசைக்கவும் முடியாது மொத்தத்தில் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. இது கடந்த கால வரலாறு குறிப்பாக சர்க்காரியா கமிஷனை நாம் எடுத்துக் கொண்டோமானால் ஆதாரம் இல்லாமல் அருமையாக வெளியே வந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி . அதிலிருந்து சாட்சிகளே இல்லாமல் ஊழல் செய்வது எப்படி என்ற ஒரு பீம்பத்தையே தமிழகத்தில் உருவாக்கியவர் கருணாநிதி.
கருணாநிதியின் வளர்ப்பிலிருந்து உருவான திமுக கட்சி மற்றும் திமுகவினர் அமைச்சர் நேரு மற்றும் திமுக அமைச்சர்களை மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது என்ன நடந்தது என்று முதலில் நாம் விடையத்திற்க்கு வருவோம், இதோ கே.என் நேரு அமைச்சரின் மீது இந்திய அமலாக்கத்துறை குற்றம் சாட்டிய விடயம்.
‘தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து, அதன் நகலை எங்களுக்கு அனுப்புங்கள்’ என, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர். தமிழக டிஜிபி வெங்கட்ராமன் அவர்கள் திமுகவால் வளர்க்கப்பட்டவர். திமுக அரசு இவருக்கு பதவி வழங்கியது இந்த நிலையில் திமுக அமைச்சர் மீது நடவடிக்கை எடுங்கள் வழக்கு பதிவு செய்யுங்கள் என்று கேட்டால் அது நடக்குமா? இது தெரியாதா? இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு இதை எப்படி நம்புவது?
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு உள்ளார். இவரது தம்பி ரவிச்சந்திரன், 30 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். வழக்குப் பகுதியில் செய்த அதிகாரிகள் ஏன் கைது செய்யவில்லை, இவர் சொத்தை ஏன் முடக்கவில்லை பதில் சொல்லுங்கள் இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகளே!
சட்ட விரோத பணப்
பரிமாற்றம்
அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய் தனர். கடந்த ஏப்ரலில் சென்னை, திருச்சி மற்றும் கோவையில், கே.என் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் கோவையில் உள்ள மணிவண்ணன் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது, நேரு அமைச்சராக உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேர்வில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழக பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: வங்கி கடன் மோசடி தொடர்பாக நாங்கள் நடத்திய சோதனையில், பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை ஆய்வு செய்த போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்ததில், மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதற்கான ஆவணங்கள் கிடைத் துள்ளன.
பணியாளர் மற்றும் அதிகாரிகள் நியமனத்திற்கு, அவர்களின் பதவியை பொறுத்து, நபர் ஒருவருக்கு, 25 – 35 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளோம்.
இந்த ஊழல் தொடர்பாக, 232 பக்கங்களில் விரிவான அறிக்கையை உங்களுக்கு அனுப்பி உள்ளோம். பணி நியமனம் தொடர்பாக, ஹவாலா பணப் பரிமாற்றம் நடந்ததற்கான புகைப்படங்கள், ரொக்கம் பெற்றதற்கான சான்றுகள், ஆவணங்கள், அதிகாரமிக்க நபர்களின் மொபைல் போனில் இருந்த வாட்ஸாப் தகவல்கள் போன்றவற்றை சேகரித்து, அனுப்பி வைத்துள்ளோம். அவற்றை ஆய்வு செய்தில், இந்த ஊழலில் சில அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள், உதவியாளர்கள் ஈடுபட்டிருப்பது உறு தியாகி உள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு, அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேர்வு முடிவு வெளியிடும் முன்னரே, பணம் வசூலிக்கப்பட்ட நபர்களுக்கு தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன; லஞ்சம் வசூலித்து பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. லஞ்சம் கொடுத்தவர்களுக்காக, ஆட்கள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. லஞ்ச பணம் வங்கிகள் வாயிலாகவும், சில நிறுவனங்களின் பெயர்களிலும் வசூலிக்கப்பட்டு உள்ளன. இந்த ஊழலால், ஏராளமான தகுதி வாய்ந்த இளைஞர்கள் தங்களின் எதிர் காலத்தை இழந்துள்ளனர். எனவே, இந்த ஊழல் குறித்து சட்ட ரீதியாக விசாரிக்க வேண்டும்.
தேர்வு முடிவு தொடர்பான ரகசிய தகவல்கள், யாரால், யார் யாருக்கு முன்கூட்டியே கசிய விடப்பட்டன; லஞ்சம் கொடுத்த நபர்களுக்காக, தேர்வு முடிவுகளை எப்படி மாற்றினர்; இந்த ஊழலில் அண்ணா பல்கலை அதிகாரிகள் யார் யார் ஈடுபட்டனர்; அவர்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார்; எத்தனை பேரின் மதிப்பெண்கள் மாற்றப்பட்டன; தகுதியான, திறமையான நபர்கள் எத்தனை பேர் நிராகரிக்கப்பட்டனர்; ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் யார்; இடைத்தரர்களாகச் செயல்பட்ட நபர்கள் யார்? அவர்கள் வாயிலாக வசூலிக்கப்பட்ட தொகை யாரிடம் வழங்கப்பட்டது என விசாரிக்க வேண்டும்.
முதல் தகவல் அறிக்கை
இது குறித்து விசாரித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அதன் நகலை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போது தான் எங்களால் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சில எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணை செய்யணும் என்று அறிக்கை விடுகிறார்கள் எதற்காக சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் இந்த புகாரையும் சிபிஐ விசாரித்தால் நிச்சயமாக இந்த புகார் செத்து விடும் வேண்டுமானால் சிபிஐ வைத்து திமுகவை மத்திய அரசு மிரட்டலாம் வேறு ஒன்றும் நடக்கப் போவதில்லை இதுவரை சிபிஐ எத்தனை வழக்கு தமிழ்நாட்டில் விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது சொல்லுங்கள் மேலும் எதற்கு சிபிஐ வழக்கு
எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தான் கூறுகிறார்கள் தவிர நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணம் கொடுத்து அதாவது லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்வோம் என்று ஏன் கூற மறுக்கிறார்கள்.
பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்களை கணக்கெடுப்பு செய்து அவர்களை பணிநீக்கம் செய்யுங்கள் இதை யார் செய்வது திமுக அரசு செய்யாது புதிதாக வரும் அரசு மட்டும் தான் செய்ய முடியும். ஒருவேளை மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தாலும் இந்த வேலையை செய்ய மாட்டார்கள் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் இந்த வேலை செய்ய மாட்டார்கள் ஏனென்றால் இரண்டுமே ஊழல் கட்சி தான், ஊழல் பெருச்சாளிகள் தான். இந்த இரண்டு கட்சியை தவிர மூன்றாவதாக வந்த கட்சியான என் டி கே. டி வி கே இந்த கட்சிகள் வாய் திறக்கவில்லை ஏனென்றால் இவர்களும் திமுகவின் அடிமைகளே.
232 பக்கம் குற்றச்சாட்டு
இந்த புகார் குறித்து அடுத்தது என்ன நடக்கும் என்று பார்த்தால் இந்திய அமலாக்கத்துறை அனுப்பிய 232 பக்கம் குற்றச்சாட்டை டிஜிபி வெங்கட்ராமன் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர் மீது இந்திய அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்யவும் நிச்சயமாக இது நடக்கும் இவருக்கு ஆதரவாக திமுக நீதிமன்றம் செல்லும் இதுதான் நடைபெறும் இதை மீறி திமுக அரசு அல்லது அமைச்சர் கே.என் நேரு மீது இந்திய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தால் அதை தடுப்பதற்கு மேலே ஒருவர் இருக்கிறார் அவர் தான் சந்திரபாபு நாயுடு இவர் விடமாட்டார்.
பிரதமர் மோடிஜி அவர்களிடம் சென்று எப்படி தடுக்க வேண்டுமோ அப்படி தடுத்து கிடப்பில் போட்டு விடுவார்கள் இதுதான் நடைபெறும் இதுபோக இன்னும் பல தெலுங்கு அமைப்புகள் பாஜக கட்சியில் உள்ளது அந்த அமைப்புகளும் பிரதமரிடம் சென்று தடுப்பார்கள் இதை மக்கள் தமிழக மக்கள் குறிப்பாக புரிந்து கொள்ள வேண்டும்
பணி நியமன ஊழல்
பணி நியமன ஊழலில், அமைச்சர் நேருவின் தம்பிகள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் இவர்களின் உதவியாளர்கள் ரமேஷ், செல்வமணி மற்றும் கவிபிரசாத் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது.
பணி நியமனம் தொடர்பாக, இவர்களை தான் பலரும் அணுகி உள்ளனர். எங்களிடம் சிக்கிய ஆவணங்களில், 150 விண்ணப்பதாரர்கள், ரவிச்சந்திரன், மணிவண்ணன் உள்ளிட்டோர் வாயிலாக, முறைகேடாக பணி நியமனம் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பே, ரவிச்சந்திரன் மற்றும் மணிவண்ணனின் உதவி யாளர்களின், ‘வாட்ஸாப்’பில் இருந்து தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மதிப்பெண்ணில் குளறுபடி செய்து தேர்ச்சி பெற வைத்த தகவலும் அதில் இடம்பெற்று உள்ளது.
பணம் வசூலிப்பு
ரவிச்சந்திரன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பட்டியல் ஒன்றில், விண்ணப்பதாரர்கள் பற்றிய குறிப்புகள் இருந்தன. அவர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டது என்பதை அடையாளப்படுத்தும் விதமாக, சில குறியீடுகளும் எழுதி வைக்கப்பட்டு இருந்தன. ரவிச்சந்திரனின் உதவியாளரான செல்வமணி தான், பணம் கொடுத்த விண்ணப்பதாரர்களுக்கு முன்கூட்டியே தேர்வு முடிவுகளையும், ‘உங்களுக்கு பணி நியமன ஆணை உறுதியாகி விட்டது’ என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.
இதற்காக விண்ணப்பதாரர்களிடம் இருந்து, அவருக்கு நன்றி தெரிவித்தும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு உள்ளன.
ரவிச்சந்திரனுடன் தொடர்பில் உள்ள கவிபிரசாத் என்பவர், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற ஒருவரை, பணி நியமன இறுதி பட்டியலில் சேர்க்க வைத்துள்ளார். அரசு துறை ஒன்றில் இணை இயக்குநர் நிலையில் பணிபுரியும் மகளுக்கு, பணி நியமன ஆணை கிடைக்க, ரவிச்சந்திரனே ஏற்பாடு செய்துள்ளார் .
ரூபாய் படம்
ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் இவர் களின் உதவியாளர்கள் தங்களை அணுகிய விண்ணப்பதாரர்களிடம் முன்கூட்டியே, 10 ரூபாய் நோட்டில் உள்ள எண்களை, அவர்களிடம் தெரிவித்துள்ளனர். நாங்கள் அனுப்பி வைக்கும் நபர்களின், ‘வாட்ஸாப்’ செயலியில், இந்த, 10 ரூபாய் படம் இருக்கும்.
அதை அவர் காண்பித்தால், எண்களை சரிபார்த்து, அவர் தெரிவிக்கும் நிறுவனங்களின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்க வேண்டும் என, தெரிவித்துள்ளனர். மொத்த ஊழலும், அந்த, 10 ரூபாய் நோட்டை மையமாக வைத்தே நடந்துள்ளது.
லால்குடி பக்கத்தில் கானக்ளியநல்லூர் என்கிற எளிமையான கிராமத்தில் பிறந்த விவசாயி.அதைத் தாண்டி அரியலூர் மிளகாய் மண்டிக்கு வியாபாரத்துக்கு போனதே பெருசு. அதன் பின்னர் புள்ளம்பாடி சேர்மன் ஆகி, லால்குடி எம்எல்ஏ ஆகி அமைச்சரும் ஆகி, திருச்சிக்கு இடம்பெயர்ந்து திமுகவின் அசைக்க முடியாத சக்தி ஆயிட்டீங்க.
இன்றைக்கு உங்களுக்கு சொந்தமாக எத்தனை ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் இருக்கு என்று ஆவணங்களை பார்க்காமல் உங்களால் சொல்ல முடியுமா? எத்தனை ஆயிரம் கோடி எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கு என்று உங்க ஆடிட்டரை கேட்காமல் சொல்ல முடியுமா ?
True Value Home (TVH) உள்ளிட்ட கட்டிடங் கள் பிரம்மாண்டமாய் ஊரெங்கும் வியாபித்து நிற்பது வியாபார திறமையால் மட்டுமா? உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி உங்களின் தம்பிகள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் உங்கள் உறவினர்கள் எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டார்கள்? ஆனால் நீங்கள் நிம்மதியாக வாழவில்லை என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். என்றைக்காவது உங்களுக்கு தலைவலிக்கிற நேரம் உங்கள் மனைவி மாத்திரை எடுத்துக் கொடுத்திருப்பாரா? என்றைக்காவது “எனக்கு தலை வலிக்குது கொஞ்சம் சுடுதண்ணி போட்டு குடுங்க” என்று சொல்லும்போது உங்கள் மனைவிக்கு அதை செய்து கொடுத்திருப்பீர்களா? உங்கள் பணத்தை, வசதியை, செல்வாக்கை தாண்டி நீங்கள் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று அவர் கள் நினைக்கும் போது இருந்திருக்கிறீர்களா? ஒரு சாதாரண மாதசம்பளக்காரர் வீட்டில் கூட இந்த அன்னியோன்யம் இருக்குமே… மகன், மருமகள், மகள், மருமகன் ஜோடியாக கிளம்பி வெளியே போவதை பார்த்து ரசித்திருக்கிறீர்களா? பேரக் குழந்தைகளை தூக்கி வைத்து கொஞ்சுவதற்கு விளையாடுவதற்கு உங்களுக்கு நேரம் இருக்கிறதா? இதெல்லாம் இருக்கிறது என்று ஏதாவது ஒரு பேட்டியில் நீங்கள் சொன்னாலும் அது உண்மை இல்லை என்று உங்களுக்கும் தெரியும்.
உங்களுக்குப் பிடித்ததை செய்து பிடித்ததை ரசித்து உங்களுக்காக எப்போது வாழப்போகிறீர்கள் ?
மனித வாழ்வு 60, 65 வருடங்கள் இருக்கலாம். உங்களுக்கு அதையும் தாண்டி விட்டது. நீங்கள் கும்பிடுகிற கடவுளின் அருளால், உங்கள் பெற்றோரின் புண்ணியத்தால் நல்ல உடல் நலத்துடனே வாழ்கிறீர்கள். அதிகாலை 5 மணிக்கு காரில் கிளம்பி திருநெல்வேலி போய், அன்றே சேலத்துக்கு ஓடி, இரவு திருச்சிக்கு பயணம் செய்யும் அளவுக்கு உங்களுக்கு உடல் நலம் இருக்கிறது. திருச்சியில் இருக்கும் நாட்களில் காலையிலேயே வயலுக்குப் போய் வந்து கேர் கல்லூரியில் போய் நிர்வாகத்தை கவனித்து விட்டு ஆசியாவிலேயே பெரியதான உங்கள் அரிசி ஆலையில் கணக்கு வழக்கு பார்த்து நீங்கள் ஓடுவதும் உழைப்பதும் யாருக்காக?
உலகத்தில் நீங்கள் நினைத்தால் உங்களுக்கு கிடைக்காதது எதுவும் இல்லை என்கிற அளவுக்கு பணமும் அதிகாரமும் இருக்கிறது. ஆனால் நிம்மதி இருக்கிறதா? எப்போதுமே “அடுத்தவர் பதவியை பிடித்தாக வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும், யாரை காலி பண்ண வேண்டும்“ என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் இடத்தை காலி செய்துவிட்டு அங்கே வருவதற்கு இன்னொருவர் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். உங்கள் கையில் இருக்கும் கத்தியால் நீங்கள் ஒருவரை குத்த முயற்சித்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் முதுகுக்கு பின்னால் பத்து கத்திகள் உங்களை குத்துவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன. நாம் என்ன, ‘மிருகங்களால் எப்போதும் தாக்கப்படுவோம்‘ என்று அஞ்சி வாழும் காட்டுமிராண்டி காலத்தில் வாழ்கிறோமா,
நாம் நாகரிகம் அடைந்த சமூகம் இல்லையா?
நாலரை வருடங்களுக்கு முன் உங்களிடம் கும்பிடு போட்டு எம்எல்ஏ சீட்டு வாங்கியவர்கள், உங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு வந்தவர்கள், எத்தனை பேர் உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்? அவர்களே உங்களுக்கு எதிரிக ளாக மாறிப் போனதற்கு என்ன காரணம்?
எத்தனை பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் உங்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டி ருக்கிறார்கள். சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் திருச்சி தில்லை நகர் 5வது கிராசில் ஒரு பழைய வீட்டின் மாடியில் பெரிய ஹால் இருந்தது. படியேறி எட்டிப் பார்த்தால் பெரிய ஹாலின் எதிர்ப்புற சுவரோரமாய் ஒற்றை டியூப்லைட் வெளிச்சத்தில், ஒற்றை ஃபேனுக்கு கீழே நீங்கள் உட்கார்ந்து ஒரு பெரிய மேஜையில் அன்றைய தினசரிகளை விரித்து வைத்து படித்துக் கொண்டிருந்த காட்சி என் நினைவுக்கு வருகிறது. படியில் ஏறி எட்டிப் பார்த்தால் சத்தம் கேட்டு உங்கள் வெள்ளெழுத்து கண்ணாடிக்கு மேலே கண்களை உயர்த்தி “யாரு?” என்பீர்கள் பெயரை சொன்னதும் “வாங்க நிருபரே…” என்று மரியாதையாக அழைத்து அமர வைத்து பேசுவீர்கள். அன்று உங்களைச் சுற்றி 10 பேர் நிற்கவில்லை. உங்கள் பின்னால் கத்தியுடன் 10 பேர் அலையவில்லை. அந்த நிம்மதியும் மரியாதையும் அகன்றுபோய், யாரை வேண்டுமானாலும் எவ்வளவு கேவலமான வார்த்தைகளை வேண்டுமானாலும் பேசலாம் என்று அந்த கிராமத்து விவசாயி உங்கள் கட்சித் தலைவர்களையும் உங்களிடம் அதிகாரிகளாக பணிபுரிந்தவர்களையும் உங்கள் கட்சியின் தொண்டர்களையும், ஆண்களையும் பெண்களையும் நீங்கள் பேசிய கொச்சையான வார்த்தைகள் காற்றில் கலந்து உங்களை சுற்றி கேட்டுக் கொண்டே இருக்க வில்லையா ?
எதற்கான போராட்டம் இது?
தமிழகத்தின் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்கள் வரிசையில் தானே இருக்கிறீர்கள்?
இன்னும் எதை நோக்கி இந்த ஓட்டம்?
இன்னும் ஓரிரு வருடங்களில் மருத்துவர் “இரண்டு இட்லிக்கு மேல் சாப்பிடக்கூடாது, மாடிப்படி ஏறக்கூடாது, வேகமாக நடக்கக்கூடாது, சத்தமாக பேசக்கூடாது” என்றெல்லாம் சொல்லப் போகிறார்.
நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை ஒரு தடவை எண்ணிப் பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? நீங்கள் வாங்கி போட்டிருக்கும் மொத்த நிலத்தையும் ஒரு தடவை நடந்து சுற்றிப் பார்த்துவிட்டு வர முடியுமா என்பது கேள்விக்குறிய விஷயம் தானே… இதற்கு பதிலாக நீங்கள் அந்த மரியாதை மிகுந்த விவசாயியாகவே இருந்திருக்கலாம்… நீங்கள் பெற்ற பிள்ளைகள் எல்லோரும் திறமையாக படித்து நன்றாகத்தானே இருக்கிறார்கள்? தங்களுக்கு தேவையானதை அவர்கள் சம்பாதித்துக் கொள்ள மாட்டார்களா ?
அல்லது இருப்பதை உருப்படியாக கட்டிக் காக்கும் திறமையற்றவர்களாக போய் விட்டார்களா?
ஏன் இந்த ஓட்டம்?
“அரசியலுக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்ய போகிறேன்” என்று மட்டும் சொல்லாதீர்கள். உங்கள் தெருமுனையில் இளநீர் விற்றுக் கொண்டிருக்கும் அந்தப் பெண் கூட அதை நம்பப் போவதில்லை.
உங்களால் வளர்க்கப்பட்டு உங்களால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட நெப்போலியனை, உங்கள் ரத்த சொந்தத்தை எப்படி விரட்டி அடித்தீர்கள் ?
எந்த அரசியல்வாதிக்கும் நேராத நேரக்கூடாத துன்பமாக திருச்சியில் அதிகாரிகளையும் அரசியல் வாதிகளையும் கட்டி அரசாங்கமே நடத்திய உங்கள் தம்பியின் மரணம் உங்களுக்கு சொல்லித் தந்த பாடம்தான் என்ன? அவரை சிதையில் ஏற்றி எரித்தபோது ஒரு சுடுகாட்டு வைராக்கியம் உங்களுக்கு ஏற்படவில்லையா ? ஆட்சி மாற்றம் நடந்து உங்கள் பிள்ளைகளின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு கூட ஜெயிலில் இருந்து பரோலில் வந்த உங்களுக்கு புத்தி வரவில்லை என்றால் இந்த தமிழகத்தில் எந்த அரசியல் வாதிக்கும் புத்தி வரப்போவதில்லை என்றுதான் அர்த்தம். அதற்குப் பிறகும் இப்படி அசிங்கப்பட்டு பணம் சம்பாதிக்க வேண்டிய ஏழ்மை நிலையிலா இருக்கிறீர்கள் ?
காலத்துக்கும் யாராலும் உறுதியாக கண்டுபிடித்து சொல்ல முடியாத பல தகிடுதத்தங்களை செய்துதான் பணம் சேர்த்தீர்கள் என்றாலும் இதுவரை போடப்பட்ட எல்லா வழக்குகளையும் உங்கள் பணத்தாலும் செல்வாக்காலும் அரசியலாலும் உடைத்து வெளியே வந்தீர்களே… ? இப்போது இப்படி மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டுமா? அல்லது ணிஞி சொல்லி இருக்கும் குற்றச்சாட்டு எல்லாம் முழுக்க முழுக்க பொய் என்று உங்கள் மனசாட்சி சொல்லுமா ? “இந்த பணி நியமனங்கள் எல்லாமே பணத்தை மையமாக வைத்து தான் நடந்தது என்பது பொய்” என்று சொல்லப் போகிறீர்களா ? அப்படி நீங்கள் சொன்னாலும் அது நிற்க போவதில்லை. சிக்க வேண்டிய ஆதாரங்கள் தெளிவாக சிக்கி இருக்கின்றன.
நீங்கள் ஜெயிலுக்குப்போவதையும் போகாமல் இருக்கப்போவதையும் அடுத்து வரக்கூடிய அரசியல் மாற்றங்கள்தான் முடிவு செய்யப் போகின்றன.
ஏற்கனவே உங்கள் வீட்டுக்கு மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் சோதனைக்கு வந்த போதும் இப்போது மீண்டும் உங்கள் மீது மத்திய அரசின் பிடி இருகும்போதும் உங்களை தினமும் பார்த்து வணக்கம் வைக்கும் எத்தனை கட்சிக்காரர்கள் சந்தோஷப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? “கட்சிக்காரனா சம்பாதிச்சான்… சொந் தக்காரன் தானே சம்பாதிச்சான்.
இப்போ அனுபவிக்கட்டும்“ என்று என் காதுபட எத்தனை பேர் பேசுகிறார்கள் தெரியுமா? உயரமாக வளரும் மரங்கள் மண்ணுக்கு கீழே தன்னுடைய வேரையும் அழுத்தமாக படர வைக்காமல் போனால் அந்த உயரமே ஆபத்தாகி அந்த மரத்தை மொத்தமாக சாய்த்து விடும் என்பது விவசாயியான உங்களுக்கு தெரியாத? திமுகவில் உங்களுக்கு சீனியரான செல்வராஜை எப்படி ஓரங்கட்டினீர்கள்?
திருச்சி சிவா மனைவி சாவுக்கு கூட கட்சிக்காரர்கள் போக பயந்தது எதனால்? அன்பில் தர்மலிங்கத்தால் வளர்ந்து அவரையும் தாண்டி வளர்ந்து அவர் மகனுடனும் போட்டி போட்டு வளர்ந்து இன்று அவர் பேரன் மகேஷ் பொய்யாமொழியுடனும் போட்டி போட்டு கொண்டே இருக்கிறீர்களே …
இவர்கள் எல்லாம் உங்களை அழித்து விடுவார்கள் என்று அச்சப்படுகிறீர்களா? அல்லது உங்களுக்கு மட்டும் எல்லாம் சாஸ்வதம் என்று நினைக்கிறீர்களா?
மத்தியில் ஆள்கிற பாஜக அரசு உங்களைப் போன்ற மாற்றுக் கட்சி அரசியல்வாதிகளை கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது, அனைத்து எலக்ட்ரானிக் ஆதாரங்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிறது, உங்களின் அனைத்து நடவடிக்கைகளும் அனைத்து பணபரிமாற்றங்களும் அவர்களின் விரல் நுனியில் இருக்கிறது, நீங்கள் இதில் சிக்கிக் கொள்ள போகிறீர்கள் என்பதை உணர முடியாத வண்ணம் எது உங்கள் கண்களை மறைத்தது ?
உங்கள் பணத்தாசை தானே… ?
இதில் இன்னொரு மிகப்பெரிய கொடுமையை மறந்து விட்டீர்கள். உண்மையிலேயே தகுதி இருந்தும் படித்து தேர்வு எழுதி, அரசாங்க வேலை கிடைக்காமல் போன அப்பாவிகளின் சாபம், பாவம் உங்களை சும்மா விடுமா? சனாதனமறுப்பு, கடவுள்மறுப்பு கொள்கையை கொண்ட கட்சியின் முக்கிய பொறுப்பில் முதன்மைச் செயலாளராக இருந்தாலும் கூட, தினந்தோறும் காலையில் உங்கள் அலுவலகத்தில் சாமி கும்பிட்டு விட்டு வந்து நேராக மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை நோக்கி சூட தட்டை காட்டி தீபமேற்றி சாமி கும்பிடும் பக்தி உள்ளவர் தானே நீங்கள்… உங்களை காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் வேண்டிக் கொள்ளும் அந்த இறைவன், நீங்கள் செய்யும் பாவங்களுக்கு தண்டனை தரமாட்டார் என்று முடிவு செய்து விட்டீர்களா? அல்லது அவரது உண்டியலிலும் பணக்கட்டுகளை போட்டு, ஊரில் எந்த கோயில் கும்பாபிஷேகம் என்று யார் வந்து நின்றாலும் லட்சக்கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுத்து இறைவனையும் விலைக்கு வாங்கி விட முடிவு செய்து விட்டீர்களா ?
