பெரம்பலூர் மாவட்டம் ஆஞ்சநேயர் கோயில் நிலத்தில் போலி கிரஷர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்…
பெரம்பலூர் மாவட்டம் ஒரு காலகட்டத்தில் விவசாய பூமியாக இருந்து வந்த காலம் மாற மாறக் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மண் வளமும் மாறிவிட்டது.
பூர்வீக தமிழன் இந்த மண்ணை ஆளும் வரை விவசாயம் செம்மையாக இருந்து வந்தன திராவிடம் கொஞ்சம் கொஞ்சமாக வளர இந்த மண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் விவசாய பூமிகளை அழித்து உருவாக்கப்பட்டது தான் எம்ஆர்எப் டயர் நிறுவனத்தின் தொழிற்சாலை.
இந்தத் தொழிற்சாலை வருவதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திமுகவினர் நமது பூர்வீக தமிழர் குடிமக்கள்மீது பொய்யான வன்கொடுமை சட்டத்தின் மூலம் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தி இந்த நிலத்தை எழுதி வாங்கினார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அடுத்ததாக இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள பெரும்பாலான தொழில்கள் ஹோட்டல்கள், கல்வி நிறுவனங்கள், குவாரிகள் மற்றும் கிரஸர்கள் அனைத்தும் இந்த மண்ணுக்கு பிழைக்க வந்தவர்கள் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு கொடிகட்டி பறக்கிறார்கள்
ஆனால் நமது பூர்விக தமிழர் குடிகள் இவர்களிடம் அடிமை வேலை செய்கிறார்கள் மேலும் கூலி வேலை செய்கிறார்கள் இதுதான் ஆண்ட பரம்பரையா ஆண்ட பரம்பரை அர்த்தம் தெரியாதவராக மாறிவிட்டார். இன்னும் இருபது வருடத்தில் இந்த மண்ணும் நம் கையில் இல்லை சுத்தமாகத் துடைத்தெறியப்படும் பிழைக்க வந்தவர்கள் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து விடுவார்கள் இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் அவர்கள் போடும் எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு போகக் கூடாது என்பதை நினைவு கொள்ள வேண்டும்.
சரி விடயத்துக்கு வருவோம்:
இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் கொடி கட்டி பறக்கும் தொழில் என்னவென்றால் மலையைச் சூறையாடுவது இதன் மூலம் கிடைக்கும் கனிம வளத்தைக் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 50, 60 கிரஷர்கள் இயங்கி வருகிறது.
இந்தக் கிரஷர்கள் அனைத்தும் முறையாக அரசிடம் அனுமதி பெறவில்லை, ஒரு சில கிரஷர்கள் அனுமதி பெற்றாலும் புதுப்பிக்கப்படவில்லை, சில கிரஷர்கள் விதியை மீறிச் செயல்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு மூன்று புகார்கள் கொடுத்துள்ளோம் முன்னாள் ஆட்சியர் பச்சாவ், அருண் ராஜ் தற்போது உள்ள கலெக்டர் வரை புகார் கொடுத்துள்ளோம் ஆனால் இந்தப் புகார்குறித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த நிலையில் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குடி கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் கோயில் நிலத்தில் கீழ்க்கண்ட கிரஸர்கள் இயங்கி வருகிறது இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் சென்னை மற்றும் திருச்சி மண்டல துணை ஆணையர் அவர்களுக்குப் புகார் அளித்து உள்ளோம் அந்தப் புகாரில் கூறியிருப்பதாவது…
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இருர் கிராமத்தில் பல நூறு ஆண்டுகளாக ஸ்ரீ பூமாலை சஞ்சீவ ராயர் மலை வழி துணை ஆஞ்சநேயர் கோயில் இருந்து வருகிறது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் விவசாய பூமியாகச் செயல்பட்டு வந்தன இந்த நிலங்கள் இப்போது சிலர் கையகப்படுத்தி கிரஷர் மற்றும் குவாரி நடத்தி வருகிறார்கள். மேலும் கிரிவல பாதையை வழிமறித்து தடுப்பு சுவர் அமைத்துத் தங்களுக்கு சாதகமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள், மேலும் சில நிலங்களை வீட்டு மனை ஏற்படுத்தி விற்பனை செய்து உள்ளார்கள்.
01. இதோ ஆஞ்சநேயர் கோயில் வடக்கு பகுதியில் சர்வே எண்: 5/ஙி மற்றும் பல சர்வே எண் உள்ளது பட்டா எண்:1000. நிறுவனத்தின் பெயர். வெங்கடேஸ்வரா கிரஷர் உரிமையாளர் பெயர். இரவி பெரிய கிரஷர் இயங்கி வருகிறது இந்த நிலத்தில் வெடிவைத்துப் பூமிக்கு கீழே பாறைகள் உடைக்கப்பட்டுள்ளது பல அடி ஆழம் தற்போது உடைக்கப்பட்டு வருகிறது. வழிபாட்டுத் தலங்களிலிருந்து ஒரு கிலோ மீட்டர்வரை கிரஷர் இயங்கக் கூடாது என்ற விதி உள்ளது இதற்கு எப்படி அரசு அனுமதி வழங்கியது. கிரிவல பாதையைத் தடுத்து ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.
02. ஆஞ்சநேயர் கோயில் கிழக்கு (கிரிவலபாதை) சர்வே எண்:713/6 மற்றும் பல சர்வே நம்பர்கள் உள்ளன பட்டா எண்:23333 பாலாஜி கிரஷர் என்ற பெயரில் பெரியகிரஷர் இயங்கி வருகிறது இதன் உரிமையாளர் நடராஜன். இந்த நிலத்தில் வெடிவைத்துப் பூமிக்கு கீழே பாறைகள் உடைக்கப்பட்டுள்ளது பல அடி ஆழம் தற்போது உடைக்கப்பட்டு வருகிறது. வழிபாட்டு தளங்கள் அருகில் உள்ளது மேலும் கிரிவல பாதையை ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.
03. ஆஞ்சநேயர் கோயில் தெற்கு பகுதி சர்வே எண்:712/1.712/2.712/3.710/1ஙி.710/1சி நிறுவனத்திற்க்கு பெயர்: எதுவும் வைக்கப்படவில்லை பெயர் இல்லாமல் நடத்துகிறார் பெரிய கிரஷர் இயங்கி வருகிறது. இந்த நிலத்தில் வெடிவைத்துப் பூமிக்கு கீழே பாறைகள் உடைக்கப்பட்டுள்ளது பல அடி ஆழம் தற்போது உடைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் தொழிற்சாலையும் நடைபெற்று வருகிறது.
04. ஆஞ்சநேயர் கோயில் மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலை மெயின் சாலையில் சர்வே எண் 708 இந்தச் சர்வே எண் ஆஞ்சநேயர் கோயிலைசேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிரஷர் பெயர்: அன்னை காமாட்சியம்மன் கிரஷர் உரிமையாளர் பெயர்: தமய சேகர், கிரசர் தேசிய நெடுஞ்சாலையில் கிரஷர் இயங்கக் கூடாது என்பது விதியாகும் இதை மீறி நடைபெற்று வருகிறது வழிபாட்டுத் தலங்கள் அருகில் கிரசர் இயங்கக் கூடாது என்பது விதியாகும் ஆனால் கோயில் நிலத்தில் இயங்குகிறது மேலும் தேசிய நெடுஞ்சாலையில் இயங்குகிறது இதுவும் விதிமிரல் இந்தக் கிரஷருக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்பதை தாங்கள் தெரிவிக்கவும். இந்தப் புகார்மீது உடனடியாகத் தாங்கள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் தாங்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சட்டப்படியான அறிவிப்பு எடுக்கப்படும் என்பதை கடிதம்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
கல் அரவை கிஷசர் ஆலை நடத்துவதற்கான முக்கிய நிபந்தனைகள்…
1. அனுமதிகள் (Permissions & Licenses)
A.மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (SPCB / TNPCB) அங்கீகாரம் பெற வேண்டும்.
B.சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance) அவசியம்.
C.தொழில் அனுமதி(Factory / Industrial Licence) உள்ளூர் நிர்வாகத்திடம் பெற வேண்டும்.
D.Explosives Act MFŠ விதிப்படி கல் வெடிப்பிற்கு (blasting) தனி உரிமம் தேவைப்படும்.
2. இடம் (Location Norms)
A.குடியிருப்பு பகுதிகளிலிருந்து 500 மீட்டர் முதல் 1 கி.மீத்தூரத்தில் இருக்க வேண்டும்.
B.பள்ளி, மருத்துவமனை, குடிநீர் ஆதாரம் போன்றவை அருகில் இருக்கக் கூடாது.
C.காடு / பாதுகாப்பு பகுதிகளிலிருந்து குறைந்தபட்ச தூரம் கடைபிடிக்க வேண்டும்.
3. மாசு கட்டுப்பாடு (Pollution Control Measures)
A. கல் அரவை இயந்திரங்களுக்கு dust suppression system (தண்ணீர் தெளிப்பு) கட்டாயம்.
B. Closed boundary wall அல்லதுgreen belt plantation சுற்றிலும் அமைக்க வேண்டும்.
C.சத்தம் (Noise) 75 dB(A)-க்கு மேல் இருக்கக் கூடாது (Industrial Zone),
D.65 dB(A)-க்கு மேல் இருக்கக் கூடாது (Residential Zone).
E.Waste disposal மாசுபாட்டை உண்டாக்காமல் செய்ய வேண்டும்.
4. சுற்றுச்சூழல் பாதுகாப்பு(Environmental Protection)
A.கல் தூசு அருகில் உள்ள விவசாய நிலங்கள், குளங்கள், குடிநீர் ஆதாரங்களைப் பாதிக்கக் கூடாது.
மரங்கள் நடுதல் (Green Belt Development) கட்டாயம்.
B.மழைக்காலத்தில் தண்ணீர் கலந்த கல் தூசு அருகில் உள்ள நிலங்களுக்குச் செல்லாமல் தடுக்க drainage system அமைக்க வேண்டும்.
5. சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள்
A.Air (Prevention & Control of Pollution) Act, 1981 மற்றும்
B.Water (Prevention & Control of Pollution) Act, 1974
C.Environment Protection Act, 1986 அடிப்படையில் அனைத்து சுற்றுச்சூழல் விதிகளும் பின்பற்றப்பட வேண்டும்.
D.மீறினால் தொழில் மூடப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். சுருக்கமாகச் சொன்னால், கல் அரவை ஆலை நடத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் சட்டப்படி இடைவெளி விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் அல்லது மாநில நெடுஞ்சாலைகள் அல்லது மக்கள் வசிக்கும் இடங்கள், கல்வி நிறுவனங்கள், பொது அலுவலகங்கள் மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலிருந்து 500 மீட்டருக்குள் கல் அரவை ஆலைகள் அமையக்க கூடாது.
தூசு, மாசு தாக்கத்தைத் தவிர்க்கக் கல் அரவை ஆலைகளிடையே, குறைந்தபட்சம் ஒரு கி.மீ., தூரம் இடைவெளி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
தொடரும்….
