ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவ லகத்திற்கு மது போதையில் வந்த தி.மு.க பிரமுகர், அதிகாரியின் இருக்கையில் அமர்ந்து இரு கால்களையும் மேஜையில் நீட்டியபடி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறேன். என் டாக்குமெண்ட் என்னாச்சு எனக்கேட்டு அடாவடித்தனம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் சாலையில் ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன், வல்லம் வடகால் பகுதியைச் சேர்ந்த தி.மு.க., செயலர் குப்பன், சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மது போதையில் சென்றார்.
அதிகாரியின் இருக்கையில் அமர்ந்து கணினி மற்றும் அலுவலக கோப்புகள் வைத்துள்ள டேபிள் மீது இரண்டு கால்களையும் நீட்டிக்கொண்டு அலுவலக ஊழியர்களிடம் தகராறு செய்தார். நான் 1 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறேன். இன்னும் என்னோட டாக்குமெண்டை தரல என சத்தம் போட்டார்.
இதையடுத்து அலுவலக ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தி வெளியில் அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் சார்பதிவாளர் அலு வலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
