தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள மணிபுரம் கிராமத்தை சார்ந்த முதியவர் பொன்னுசாமி வயது 84 இவரது மனைவி மூதாட்டி கோவிந்தம்மாள் வயது 80 இந்த வயதான தம்பதியருக்கு செந்தில்குமார் என்ற மகனும் மாது, மணி, சந்திர என்ற மூன்று பெண்களும் உள்ளனர், அனைவருக்கும் திருமணம் ஆகி தனி குடித்தனம் இருந்து வருகின்றனர்.
இந்த வயதான தம்பதியருக்கு திப்பிரெட்டி அல்லி கிராமத்தில் விவசாய நிலம் 4 ஏக்கர் உள்ளது. இதில் வயதான தம்பதியர் 3 ஏக்கர் நிலத்தை தனது மகனின் பெயரில் கிரயம் செய்து கொடுத்துவிட்டு ஒரு ஏக்கர் நிலத்தை வேறு ஒரு நபருக்கு விற்றுவிட்டு அந்த இடத்தில் இருந்து வெளியேறி உள்ளனர்
சொத்து பிரிப்பதில் வயதான தம்பதியர் மகன் செந்தில்குமார் மற்றும் பெண் பிள்ளைகள் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது இதனால் இந்த குடும்பத்தில் அடிக்கடி வாய் தகராறு பஞ்சாயத்து என பலமுறை நிகழ்ந்துள்ளது வருவாய்த் துறையிலும் புகார் மனுக்கள் இருந்துள்ளனர் இந்த நிலையில் வயதான தம்பதியினர் இருந்த கொஞ்ச நிலத்தையும் விற்று விட்டதால் வேறு நிலம் இல்லாததால் பொம்மிடி அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான தண்டவாளம் ஓரத்தில் குடிசை அமைத்து சில ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளனர் இந்த நிலையில் சில தினங்க ளுக்கு முன்பு ரயில்வே துறை அந்த குடிசையை அகற்றியதால் வயதான தம்பதி யினர் வேறு வழியின்றி தனது மகன் வீட்டிற்கு பெட்டி படுக்கை பாத்திரங்கள் கயிறு கட்டில் சிலிண்டர் அடுப்பு ஆகிய பொருட்களை சரக்கு வாகனத்தில் ஏற்றுக்கொண்டு மகனின் வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால் இவரது மகனின் குடும்பத்தினர் வயதான தம்பதியை வீட்டுக்குள் ஏற்றுக் கொள்ளாமல் தட்டு முட்டு சாமானங்களையும் வீட்டில் வைக்க அனுமதிக்காமல் புறக்கணித்துள்ளனர்.
வாடகை வாகன ஓட்டி அனைத்து பொருட்களையும் நெடுஞ்சாலை ஓரத்தில் இறுக்கி வைத்து விட்டு வயதான தம்பதியினரை சாலை ஓரத்தில் விட்டு விட்டு சென்றுவிட்டார் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வயதான தம்பதியினர் சாலை ஓரத்தில் வீட்டு சாமானங்களுடன் பரிதாபமான நிலையில் அமர்ந்திருப்பதை கண்ட பொதுமக்கள் அவர்களின் பரிதாப நிலையை அறிந்து தண்ணீர் பழம் சாப்பாடு வாங்கி கொடுத்து இவர்களின் பரிதாப நிலை கண்டு வேதனையுற்றனர்.
சுமார் ஏழு மணி நேரமாக வயது முதிர்ந்த தம்பதியினர் சாலை ஓரத்தில் பரிதாபமாக இருப்பதைக் கண்ட சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் பொதுமக்கள் ஆத்திரத்தில் வயதான பெற்றோரை சாலை யோரத்தில் இருக்க காரணமான பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி சாலையில் கற்களைக் கொட்டி வயதான தம்பதியினரை கயிறு கட்டிலில் சாலையில் நடுவே அமர வைத்து மறியலில் ஈடுபட்டனர்
தகவல் அறிந்த, மல்லாபுரம் வருவாய்த்துறை அதிகாரிகள் பொம்மிடி காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து வயதான வயதான தம்பதியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பராமரிக்க வேண்டும் என அவர்களது மகன் குடும்பத்தினரிடம் வேண்டுகோள் வைத்தனர் சொத்து பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் தீர்த்துக் கொள்ளலாம் முதலில் வயதான தம்பதியினரை சாலையில் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என வருவாய்த்துறை காவல்துறை பொதுமக்கள் தம்பதியரின் பையனின் குடும்பத்தினரிடம் வலுவாக முறையிட்டதால் ஒரு வழியாக வயது முதிர்ந்த தம்பதியினரை அவரது மகன் செந்தில்குமார் குடும்பத்தினர் வீட்டிற்குள் அனுமதித்தனர்
சொத்திற்காக 80 வயதான மூதாட்டி தம்பதியினரை சாலை ஓரத்தில் சுமார் 8 மணி நேரமாக மகன், மூன்று பெண் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வெயிலில் இருக்க வைத்து சித்தர்வதைக்கு ஆளாக்கிய சம்பவம் அப்பகுதி கோபத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
