1.55 லட்சம் பேருக்கு அரசு வேலை அபாண்டமான பொய்

விடிந்து எழுந்திருந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் என்ன பொய் சொல்லலாம் எப்படி சொல்லலாம் எப்படி பேசினால் மக்கள் நம்புவார்கள் என்பதை மிக ஆழமாக பொய்களை அவிழ்த்து விடுகிறார் அதில் ஒரு பொய் தான் இந்த விடயம். தமிழக அரசு துறையில் ஒரு லட்சத்தி 37 ஆயிரம் நபர்களுக்கு அரசு பணி வழங்கியதாக முதல்வர் கூறுகிறார்.இந்த கூற்றின்படி ஒரு வருடத்திற்கு 35 ஆயிரம் நபர்களுக்கு அரசு பணி வழங்கியதாக கணக்கிட்டு பார்க்கும்போது தெரிய வருகிறது.

1. இந்த பட்டியலில் அமைச்சர் கே என் நேரு நியமனம் செய்த 2300 நபர்கள் இடம் பெற்றுள்ளார்களா என்று பார்க்க வேண்டும் இதில் தான் இந்திய அமலாக்கத்துறை விசாரணை செய்து நேரு குடும்பம் பணம் பெற்றுக் கொண்டு நூதன முறையில் இவர்களுக்கு அரசு பணி வழங்கியதாக குற்றம் சாட்டியுள்ளது இது குறித்து முதல்வர் வாய் திறக்கவில்லை.

2. இந்த ஐந்து வருடங்களில் அரசு துறையை சேர்ந்த எவ்வளவு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் எண்ணிக்கை என்னவென்று முதல்வர் ஏன் அறிவிக்கவில்லை. இது குறித்து வாய் திறக்க வேண்டும்.
3. தமிழ்நாடு அரசு பணியில் அனைத்து துறைகளிலும் பணியாளர்கள் பணியிடங்கள் எவ்வளவு காலியாக உள்ளது என்பதை முதல்வருக்கு தெரியுமா? தெரியாதா? இது குறித்து இவர் ஏன் வாய் திறக்கவில்லை.

4. உதாரணமாக தமிழக பத்திரப்பதிவு துறையில் 300-க்கும் மேற்பட்ட சார்பதிவாளர்கள் வெளியே உள்ளார்கள் அதாவது சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்கள் மீண்டும் அவர்களை பணியில் அமர்த்தாமல் 50 சதவீத சம்பளத்தை வழங்கி வருகிறார் ஒரு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஆறு மாதத்திற்குள் அவரை மாற்றும் பணியில் சேர்க்க வேண்டும் என்பது அரசாங்க விதி இது குறித்து முதல்வர் அவர்கள் ஏன் வாய் திறக்கவில்லை.
5. இதே பத்திரப்பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறை, வட்டாரப் போக்குவரத்து துறை என்று பல துறைகளில் உயர் அதிகாரிகள் பதவி கடந்த ஐந்து வருடமாக காலியாக கிடைக்கிறது இதை ஏன் முதல்வர் நிரப்பவில்லை இது குறித்து முதல்வருக்கு தெரியுமா தெரியாதா. இது குறித்து ஏன் வாய் திறக்கவில்லை.

6. தமிழக காவல்துறை தலைவர் பதவியே காலியாக உள்ளது இதையே முதல்வர் நிரப்பவில்லை தமிழ்நாடு பப்ளிக் கமிஷன் தலைவர் பதவியே பல ஆண்டுகளாக காலியாக இருந்தது இது குறித்து முதல்வர் வாய் திறக்கவில்லை.

7. தமிழக போக்குவரத்து துறையில் இயங்கும் அரசு பேருந்துகளுக்கு தேவையான ஓட்டுநர்கள் நடத்துனர்களை தேர்வு செய்யவில்லை மாறாக இங்கே பணிபுரியும் நடத்துனர்கள் ஓட்டுநர்களை பிரைவேட்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கி உள்ளார்கள் இது குறித்து ஏன் முதல்வர் வாய் திறக்கவில்லை.

8. தமிழகத்தில் இயங்கப்படும் மெட்ரோ ரயில்வே பணியில் செயல்படும் ஓட்டுநர்கள் மொத்தம் 200 நபர்கள் இவர்களுக்கு அரசு பணி வழங்காமல் மேன்பவர் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு அவர்கள் மூலம் ஓட்டுநர்களை நியமனம் செய்துள்ளார்கள் இது குறித்து எண் முதல்வர் வாய் திறக்கவில்லை.

9. சாலை பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தி நடு இரவில் கைது செய்யப்பட்டார்கள் பெண் ஊழியர் என்று கூட பாராமல் கைது செய்து சித்திரவதை செய்தீர்கள் அவர்கள் கேட்டது என்ன அதை ஏன் இவர் வாய் திறக்கவில்லை.

10. கல்வித்துறையில் பணிபுரியும் அரசு ஆசிரியர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக போராட்டம் நடத்தினார்கள் சாலை மறியல் செய்தார்கள் அவர்கள் மீது கண்மூடித்தனமாக போலீசையே விட்டு தாக்கியவர் தான் இந்த முதல்வர்

2005 ஆம் ஆண்டு முன்பு இருந்த அரசு ஊழியர் சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும் என்று கடந்த தேர்தலில் வாக்குறுதி கொடுத்தார் நிறைவேற்றினாரா என்ன செய்தார் மக்களே புரிந்து கொள்ளுங்கள்

அரசு வேலை கொடுத்தது கண்துடைப்பு மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு ராஜதந்திரம் இவை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.