இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியின் மலைக்க வைக்கும் சொத்துக்குவிப்பு

ராஜலட்சுமி என்பவர் சென்னை காவல் துறை பா*லியல் தடுப்​புப் பிரிவில்​(1) ஆய்​வாள​ராக பணிபுரிகிறார். இவர் திருமங்​கலம், வெல்​கம் காலனி​யில் குடும்​பத்​துடன் வசிக்​கிறார்.

இவர் பணி​யின்​போது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்​படுத்தி முறை​கே​டாக அதி​கள​வில் பணம் சம்​பா​தித்து வரு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதை அடிப்​படை​யாக வைத்து கடந்த 13-ம் தேதி இவரது வீட்​டில் லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸார் சோதனை நடத்​தினர்.

இவர் கடந்த 1999ம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளராக தனது போலீஸ் வேலையை தொடங்கினார். அதன் பிறகு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்துப் பிரிவு எனப் பல்வேறு முக்கியத் துறைகளில் செல்வாக்கு மிக்க பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் அதிகாரத்தில் இருந்த காலத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக பெரும் அளவில் பணம் சம்பாதித்ததாக சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை தலைமையகத்திற்கு வரிசையாக புகார்கள் சென்றவண்ணம் இருந்தன.

இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் தங்களது ரகசிய விசாரணையை தொடங்கினர். அப்போது கிடைத்த முதற்கட்ட ஆதாரங்களின்படி, கடந்த பிப்ரவரி 13ம் தேதி ராஜலட்சுமியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை முடி​வில் பல்​வேறு சொத்​துகள் தொடர்​புடைய முக்​கிய ஆவணங்​களை லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் பறி​முதல் செய்து கையோடு எடுத்​துச் சென்​றனர்.

இதன் தொடர்ச்​சி​யாக வருமானத்தை விட 372% அதிக சொத்து சேர்த்​த​தாக ஆய்​வாளர் ராஜலட்​சுமி மீது வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

அதில், “குற்​றச்​சாட்​டுக்கு உள்​ளான ஆய்​வாளர் ராஜலட்​சுமி மது விலக்கு அமலாக்​கப் பிரிவு, பொருளா​தார குற்​றப்​பிரிவு, பாலியல் தடுப்​புப் பிரிவு, போக்​கு​வரத்து புல​னாய்​வுப் பிரிவு போன்ற முக்​கிய​மான இடங்​களில் பணிபுரிந்​த​போது தனது பதவியை துஷ்பிரயோகம் செய்​து, 01.06.2017 முதல் 30.06.2025 வரையி​லான கால​கட்​டத்​தில், அசை​யும் மற்​றும் அசையா சொத்​துக்​களை வாங்கி குவித்திருந்​துள்​ளார்.

2017ம் ஆண்டு தொடக்கத்தில் வெறும் 3.64 லட்ச ரூபாயாக இருந்த அவரது சொத்து மதிப்பு, 2025ம் ஆண்டிற்குள் பல கோடிகளை தொட்டுள்ளது.
தனது வரு​மானத்தை விட ஊழல் மற்றும் சட்​ட​விரோத வழிகளில் ரூ.5.42 கோடிக்கு சொத்​துகளை தனது பெயரிலும், குடும்ப உறுப்​பினர்​களின் பெயரிலும் வாங்​கி​யுள்​ளார்.

அதாவது வரு​மானத்தை விட 372% அதிகள​வில் சொத்து சேர்த்​துள்​ளார். இதையடுத்​து, அவர் மீது ஊழல் தடுப்பு சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்யப்பட்​டுள்​ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் எத்தனையோ நேர்மையான அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், இவர் காவல் துறையிலேயே, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.