அரசு ஒப்பந்தாரர் மற்றும் வீட்டு வரிக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை அதே ஊரில் பணியமர்த்த துடிக்கும் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் அபிராம சுந்தரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை. பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி துணிந்து செயல்படும் அபிராம சுந்தரி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் சில ஊராட்சி செயலர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் அவர்களை நிர்வாக நலன் கருதி பணிமாறுதல் செய்து கடந்த மாதம் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் அபிராம சுந்தரி உத்தரவிட்டார்.
அந்த வரிசையில் பொன்னமரா வதியை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் ஒருவரிடம் 30 ஆயிரம், புதிதாக வீட்டு வரிக்கு ஒருவரிடம் 30 ஆயிரம் லஞ்சம் கேட்டதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களிடம் தண்ணீர்வரிக்கு ஆயிரக் கணக்கில் லஞ்சம் வாங்குவதாக பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து வேகுபட்டி ஊராட்சி செயலர் பாண்டிமீனாவை அம்மன்குறிச்சிக்கு பணிமாறுதல் செய்து பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் அபிராமசுந்தரி உத்தர விட்டார். ஆனால் அந்த உத்தரவை துளியும் மதிக்காத பாண்டிமீனா, வேகுபட்டியில் மட்டுமே பணிபுரிவேன், வேறு இடத்தில் பணிபுரிய மாட்டேன் என்று கூறி ஒரு மாதத்திற்கு மேலாக பணியில் சேராமல் அலைக்கழித்து வந்துள்ளார்.
இந்நிலைலையில் பணிமாறுதல் செய்து பல நாட்கள் ஆகியும் இதுவரை பாணடிமீனா ஏன் பணியில் சேரவில்லை என வட்டார வளர்ச்சி அலுவலர் அபிராம சுந்தரியிடம் பத்திரிக்கையாளர்கள் தொலைபேசியில் கேட்ட பொழுது புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா அவர்களின் வழிகாட்டுதலின்படி தான் செயல்படுவாதாக தெரிவித்தார்.
இந்நிலையில் (05/03/2026) அன்று அவசர அவசரமாக பாண்டிமீனாவை மீண்டும் வேகுப் பட்டியில் பணியில் சேர உத்தரவிட்டுள்ளார் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலு வலர் அபிராம சுந்தரி. பாண்டி மீனா மீது பல்வேறு புகார்கள் தமிழக முதல்வர், புதுக் கோட்டை மாவட்ட ஆட்சி த்தலைவர், சம்பந்தபட்ட துறை செயலர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள நிலையில், மீண்டும் அவரை வேகுப்பட்டியிலேயே பணி யாற்ற உத்தரவிட்டது எவ்விதத்தில் நியாயம் எனவும், அவரை மீண்டும் வேகுபட்டிக்கு வந்தால் அவர் எவ்வாறு நேர்மையாக செயல்படுவார் என்றும்,வேகுப்பட்டிக்கு வர என்ன காரணம் எவ்வளவு “ல”கரங்கள் பணம் மாறியதோ என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பாண்டி மீனா மீது பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்ட நிலையில் பொதுமக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், வேகுபட்டிக்கு வேறு ஒரு புதிய ஊராட்சி செயலரை நியமிக்க வேண்டும் எனவும் ,உத்தரவை மதிக்காத ஊராட்சி செயலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், ஊழலுக்கு துணைபோகும் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் அபிராமசுந்தரி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பு: இதற்கு முன்பு பாண்டி மீனா வீடுகளில் முறைகேடு செய்து சஸ்பென்ட் செய்தது குறிப் பிடத்தக்கது.
