ஸ்டாலின் ஒரு முறை பேசும்போது நான் எடப்பாடியை எச்சரிக்கிறேன் எடப்பாடி கண்டிக்கிறேன் என்று செத்த பாம்பினை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு போகிறாரே தவிர அவருக்கு தெரியும் இது ஒன்றுக்கும் உதவாது என்று மக்களுக்காக இவர் எடப்பாடியை எதிர்க்கட்சியாக பார்ப்பது போல காண்பித்துக் கொண்டு திரிகிறார் ஆனால் கல நிலவரம் என்னவாக உள்ளது, அதிகபடியாக இவர்கள் யாருக்கு தொல்லை கொடுக்கிறார்கள் தாவெகா கட்சித் தலைவர் விஜய்க்கு எடப்பாடி ஏற்கனவே திமுக உடனும் ஸ்டாலினுடைய ஒரு செட்டில்மெண்ட்–க்கு வந்து விட்டார். இதுதான் உண்மை, களநிலவரமும் இதுதான் இதனை அதிமுக தொண்டர்கள் ஓரளவுக்கு புரிந்து கொள்கிறார்கள் எடப்பாடி பழனிச்சாமி என்கிற ஒரு தனி நபரால் மட்டுமே திமுக வென்று வருகிறது.
எடப்பாடியின் தவறான அரசியல் ஆளும் இவர் செய்யும் தவறுகளாலும் மட்டுமே திமுக ஜெயித்து வருகிறது
தற்போது கூட ஓட்டு பிரிக்கும் வேலையை தான் இவர் செய்து வருகிறார்
கருணாநிதி முதல்வராக இருக்கும்போது அவர் எம்ஜிஆரை எதிர்த்தார். அவருக்கு எப்பேர்பட்ட தொல்லைகளை எல்லாம் கொடுத்தார்கள் உலகம் சுற்றும் வாலிபர் படத்தை வெளியிட முடியாமல் தடுத்து தொல்லை கொடுத்தார்கள் 60,000 வழக்கு எம்ஜிஆர் தொண்டர்கள் மீது தொடரப்பட்டது சட்டமன்றத்தில் எம்ஜிஆர் மீது செருப்பு வீசப்பட்டது எம்ஜிஆரை மலையாளி என்றார்கள் ஒரு மலையாளியை நம்பி ஒரு நடிகரை நம்பி பின்னால் செல்கிறார்கள் என்றெல்லாம் கூறினார்கள் புரட்சித் தலைவரை கேவலமாகவும் கடுமையாகவும் விமர்சனம் செய்தார்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கூட அவர் உயிருடன் இல்லை அவர் உயிரிழந்து விட்டார் என்றெல்லாம் கூறினார்கள் இப்படி எல்லாம் பேசினார்கள் இது போதாத குறைக்கு அடுத்ததாக ஜெயலலிதா அம்மையாருக்கு இவர்கள் கொடுக்காத தொல்லையே இல்லை சட்டமன்றத்தில் அவர்களது சேலையினை பிடித்து இழுத்து அவமானப்படுத்தினார்கள் அவர் எனக்கு இது எதுவும் வேண்டாம் நான் ஹைதராபாத்திற்கு செல்கிறேன் என்றும் கூறும் அளவிற்கு செய்தார்கள் ஏர்போர்ட் அருகில் லாரியை விட்டு அவர் சென்ற காரினை விபத்தில் சிக்கல் செய்தார்கள் இப்படி எல்லாம் செய்த திமுக எடப்பாடிக்கு என்ன தொல்லை கொடுக்கிறார்கள் எடப்பாடி ஏன் எதுவும் செய்யவில்லை ஏன் இவரை தங்கத் தொட்டிலில் அமர வைத்து தாலாட்டுகிறார்கள் இதில் என்னதான் மர்மம் உள்ளது எடப்பாடி விடயத்தில் மட்டும் ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன்?
