நமது கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டம்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

16/03/2026 அன்று காலை 10:00 மணி அளவில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள நமது கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகு தியில் போட்டியிடுவது என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

நமது கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது ஆனால் தேர்தல் முடிந்த பின்பு தான் பதிவு எண்கள் வழங்கப்படும் என்று தெரிவித்து விட்டதால் நமது கட்சியின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுவார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் உள்ள நமது கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பரப்புரை மற்றும் பிரச்சாரத்தில் களப்பணி செய்ய வேண்டும் நமது ஆதரவாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த தீர்மானங்கள் அனைத்தும் நமது கட்சியினருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.