ஜால்ரா அடிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு நிதி உதவி

தனியார் நிறுவனத்தை சார்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஓய்வூதியம் (ரூ 15,000) மற்றும் இலவச வீடுகள் காப்பீடு என அனைத்தும் அரசு செலவில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏன் அவசரமாக வெளியிடப்பட்டது, என்பதற்கு பதில் தேர்தல் தேதி இன்று வெளியாகும் என்பதால் தான்.

மக்கள் சேவை செய்யும் தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள் செவிலி யர்கள் ஆகியோரின் கோரிக்கைகளுக்கு செவி மடுக்காத நீங்கள் குறிப்பாக அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதில் நிதி நெருக்கடி என்கிறீர்கள்? இவர்களுக்கு தேர்தல் நேரத்தில், அறிவிக்கப்படும் நோக்கம் தான் என்ன?
இந்த உதவிப் பெறும் பத்திரிக்கையாளர்களுக்கும்
மக்கள் பணிக்கும் என்ன சம்பந்தம்?
உங்களுக்கு ஜால்ரா அடிப்பதற்கு உங்கள் கட்சி பணத்தை வழங்குவது தானே முறை.
கடந்த 5 ஆண்டுகளாக நீங்கள் நிர்வகிக்கும் காவல்துறையில் ஒட்டு மொத்த நிர்வாகத்தில் எத்தனை ஊழல்கள், சீர்கேடுகள், கொடூர லாக்கப் மரணங்கள், கஞ்சா போதைவஸ்துகள் புழக்கத்தை நார்மலைஸ் செய்தது, அதனை உங்கள் கட்சி நிர்வாகியே விற்றது, இப்படி மக்களுக்கு தீங்கு செய்யும் பிரச்சினைகளை விவாதிக்காத இவர்களுக்கு இந்த மக்கள் பணத்தை பெறுவதற்கு என்ன தகுதி இருக் கிறது. இதற்கு காரணமான உங்களைப்போன்ற கீழ் தரமான அரசியல் வாதி இந்த நாட்டில் உருவா கக்கூடாது. நீங்களே கடைசியாக இருக்க வேண்டும்.
நமது சிறப்பு நிருபர்