சொந்த ஊர்லயே வழி தெரியாம தவிச்ச தமிழறிஞர் மு.வ! பின்னணியில் இருந்த அந்த அதிர்ச்சியூட்டும் வரலாற்றுச் சதி என்ன தெரியுமா?
தமிழ்நாட்டின் வரைபடத்தையே மாற்றி, தமிழ் ஊர்களின் பெயர்களை தெலுங்கில் மாற்றிய ஒரு மிகப்பெரிய அரசியல் சதி பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதைப் படிச்சீங்கன்னா கண்டிப்பா அதிர்ச்சியாகிடுவீங்க!
தமிழறிஞர் மு.வரதராசனார் (மு.வ) வாழ்வில் நடந்த இந்த நிஜ சம்பவம், நம் வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்ட ஒரு கசப்பான உண்மை. வாங்க, அது என்னன்னு பார்க்கலாம்! ஒருமுறை தமிழறிஞர் மு.வ அவர்கள், பெங்களூர் செல்லும் ரயிலில் ஏறி, ஜோலார்பேட்டையை அடுத்த ‘பச்சூர்’ ரயில் நிலையத்தில் இறங்கினார். அங்கிருந் தவர்களிடம், “மாமுடிமான பல்லி-க்கு எப்படிப் போகணும்?” என்று கேட்டார். ஆனால், அங்கிருந்த யாருக்குமே அப்படி ஒரு ஊர் இருப்பதே தெரியவில்லை! ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கும் தெரியவில்லை.
கடைசியில் ஒருவழியாக ஒருவர், “ஓ… அது ‘வெள்ளையக் கவுண்டனூர்’ ஆச்சே! நீங்க அந்தக் பெயரைச் சொல்லிக் கேட்டிருந்தா எல்லாரும் சொல்லியிருப்பாங்களே. ‘மாமுடிமான பல்லி’னா யாருக்கும் தெரியாதுங்க” என்று வழிகாட்டினார்.
நண்பர் வீட்டுக்குப் போனதும் மு.வ-வுக்கு ஒரு பெரிய உண்மை காத்திருந்தது. அந்த ஊர் மக்களுக்குக் கூட தங்களது ஊரின் பெயர் ‘மாமுடிமான பல்லி’ என்று தெரியாதாம்! பத்திரப்பதிவு அலுவலகத்திலும் (ஸிமீரீவீstமீக்ஷீ ளியீயீவீநீமீ), தபால் நிலையத்திலும் மட்டுமே இந்தப் புதுப் பெயர் புழக்கத்தில் இருந்திருக்கிறது. மு.வ-வின் நண்பர் சொத்து பிரிக்கப் போனபோதுதான், அவர் ஊருக்கே இப்படி ஒரு தெலுங்குப் பெயர் வைக்கப்பட்டிருப்பதே அவருக்குத் தெரியவந்ததாம்!
இதற்கெல்லாம் காரணம், 1932 – 1936 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் நீதிக்கட்சி முதல்வராக இருந்த ‘பொப்பிலி அரசர்’ (ராவு ஸ்வச்சல்லபதி ராம்கிருஷ்ணா ரங்காராவ்). 1911 வரை வடவேங்கடம் வரை பரவியிருந்தது தமிழ்நாடு. ஆனால் ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக திருத்தணி, சித்தூர், திருப்பதி போன்ற பகுதிகளை இணைத்து ‘சித்தூர்’ என்ற புதிய மாவட்டத்தை உருவாக்கினார்கள். அப்போது “விசாலா ஆந்திரம்“ கேட்டுப் போராடிய தெலுங்கர்கள், சித்தூர் பகுதியை ஆந்திராவுடன் இணைக்கத் துடித்தனர்.
இதற்குத் துணைபோன பொப்பிலி அரசர், குப்பம் தாலுகாவில் உள்ள பல தமிழ் கிராமங்களை சித்தூரோடு இணைப்பதற்காக, அந்த ஊர்களின் பெயர்களையெல்லாம் அரசு ஆவணங்களில் தெலுங்குப் பெயர்களாக மாற்றிவிட்டார்!
மாற்றப்பட்ட சில பெயர்களைக் கேட்டால் நீங்களே ஷாக் ஆகிடுவீங்க:
• பச்சூர் – பந்தார பல்லி
• பழையனூர் — அதன கவுனி பல்லி
• புதூர் — கொண்ட சிந்தன பல்லி
• கட்காவூர் – கொத்தூர்
• பழைய பேட்டை – ஜயந்தி புரம்
• கோமுட்டியூர் – பய்யப்ப நாயனு பேட்டே
• வலாரிப்பட்டி – நல்ல கதிரன பல்லி
இதையெல்லாம் கேட்டு வேதனைப்பட்ட மு.வ, “இந்தப் பெயர்களை வைக்கத் துணிந்தவர்களின் வீரத்தைப் பாராட்டுவதா, அல்லது அவர்களின் துணிவுக்கு இடம் தந்த தமிழரின் தாராள மனப்பான்மையைப் பாராட்டுவதா என்றே தெரியவில்லை” என்று தனது ‘மொழிப்பற்று’ நூலில் மிக வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார்.
தமிழர்களின் நிலம் எப்படி கொஞ்சம் கொஞ்சமாகப் பறிபோனது என்பதற்கு இந்த வரலாற்று நிகழ்வே ஒரு பெரிய சாட்சி!
நமது சிறப்பு நிருபர்
