ஏரியை ஏப்பம் விட்ட குன்னம் தாலுகா வட்டாட்சியர் மீட்டு எடுப்பாரா பெரம்பலூர் ஆட்சியர்?

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லை கிராமத்தில் ஓலைப்பாடி கிழக்கு சர்வே எண் 26கி எண்ணுக்கு கட்டுப்பட்ட நாராயணன் குட்டை காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏரியை தனிநபர் சிலர் உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவருடன் சேர்ந்து கொண்டு ஏரியை முழுவதுமாக தூர்த்து கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனர்.
இது நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. யுடிஆரில் நத்தம் எனவும் கிராம கணக்கில் வண்டி பாதை எனவும் எப் எம் பி யில் கழிவு நீர் குட்டை எனவும் பதிவாகி உள்ள நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். ஊர்மக்கள் கொடுத்த புகார் அடிப்படையில் இது பற்றி நேரில் பல ஆய்வு செய்து வேப்பூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை அப்படி ஒரு ஏறியே அங்கு இல்லை என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
அப்போதைய சின்னம் வட்டாட்சியர் கோவிந் தம்மாள் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது வேப்பூர் ஒன்றிய ஙிஞிளி பூங்கொடி அவர்களிடம் விசாரித்து சொல்வதாக கூறினார். வி.ஏ.ஓ மற்றும் வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் விசாரிக்காமல் வேப்பூர் ஒன்றிய ஙிஞிளி விடம் கேட்டு சொல்கிறேன் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. பிறகு பெரம்பலூர் மாவட்ட ஊராட்சியில் அப்போதைய உதவி இயக்குனர் அவரை தொடர்பு கொண்ட போது இதைப் பற்றி தீர விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்த நிலையில் அவசர அவசரமாக உள்ளூர் திமுக பிரமுகர் ஒருவர் துணை உடன் வேப்பூர் ஒன்றிய நிதியிலிருந்து பொது கழிப்பிடம் கட்டப்பட்டுவிட்டது.
இதைப் பற்றி கிராம மக்களிடம் விசாரித்த போது ஏரியை காணவில்லை என்று செய்தி அறிந்தவுடன் அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதை மறைப்பதற்காக பொதுக்கணித்திடம் கட்டி விட்டதாக கூறினார்கள். ஏரி தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வருடமாக முதலமைச்சரின் தனி பிரிவிற்கு மனு செய்த நிலையில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில் இணைய வழி வாயிலாக பெரம்பலூர் நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குனர் அவர்களுக்கு புகார் பதிவு செய்யப்பட்டு கடித எண் ஓ.மு.அ 3/1369/2025. நாள்: 06.06.2025 அன்று குள்ளம் வருவாய் துறை வட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் பெரம்பலூர் அவர்களின் கடித எண்: ஒ.மு.ஆ 1/22 924/2025. நாள்: 28/07/2025 அன்று வருவாய் கோட்டாட்சியர் (மு.கூ.பொ) பெரம்பலூர் அவர்களுக்கு கடிதம் வைத்தும் இதுவரை ஏரியாக்கிரமிப்பு சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஒவ்வொரு முறையும் நிலை அளவையர்கள் அளவீடு செய்வதும் மற்றும் நீயா நானா போட்டியில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியமும் குன்னம் வட்டாட்சியர் அலுவலகமும் இருக்கும் நிலையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள் காணாமல் போவதை கண்டிப்பாக கண்கூடாமல் பார்க்கலாம். நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகள் சம்பந்தமாக உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களையும் கண்டும் காணாமல் இருப்பது வருத்தத்திற்குரியது தான்
மீட்கப்படுமா ஏரி பொறுத்திருந்து பார்ப்போம்….
நமது சிறப்பு நிருபர்