நிகிதா புகாரால் அஜித் குமார் உயிரிழந்த சம்பவம் ஆண்களின் உரிமை பற்றிய மௌன சமூகத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது…

நமது நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்புக்கான பல்வேறு அமைப்புகள் மற்றும் சட்டங்கள் உள்ளன – மகளிர் ஆணையம், மாதர் சங்கம், மற்றும் பெண்கள் பாதுகாப்பு மையங்கள் போன்றவை அன்றாடமாகச் செயல்படுகின்றன. ஆனால், இதே போன்று ஆண்களுக்கென ஒரு சட்ட அமைப்போ, ஆணையமோ, உரிமை இயக்கமோ இல்லையே என்பது கவலையளிக்கிறது.

சமீபத்தில், அஜித் குமார் என்ற வழிபாட்டு தள ஊழியர்மீது, நிகிதா என்ற பெண், தனது நகை காணவில்லையெனப் பொய் புகார் அளித்த சம்பவம், மிகக் கோரமாக முடிந்தது. அவர்மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, விசாரணை என்ற பெயரில் அவமதித்தும், அராஜகமாகத் தாக்கியும், உயிரைப் போக்கியும் உள்ளனர்.

இந்தச் சம்பவத்தில், ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த நேரத்தில், ஆண்களின் பாதுகாப்புக்கென இருந்திருக்க வேண்டிய சட்டவழி வாய்ப்புகள் இல்லையே. இதுபோல், பொய் புகார்களின் விளைவாக, நிரபராத ஆண்கள் வாழ்வை இழக்கும் நிலை அதிகரிக்கிறது.

இதே போன்று, அவிநாசி ரிதன்யா மற்றும் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்குகள் போலவே, சில பெண்கள் சம்பவங்களில் கூட அரசு அமைப்புகள் மௌனம் கடைத்திருக்கின்றன. ஆனால் பெண்கள் உரிமை என்ற பெயரில், சிலர் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

ஒரு சமநிலையற்ற சமூகத்தில் உண்மையான சமநிலை ஏற்பட வேண்டும். ஆண்களுக்கான உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் நியாயத்திற்கான சட்ட அமைப்புகள் கட்டாயமாக உருவாக வேண்டும். இன்றைய இளம் தலைமுறை இதைப் புரிந்து கொண்டு, மாற்றத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது.

மக்களே! உங்கள் மௌனம் ஒரு ஆளின் உயிரை எடுத்துவிடக்கூடும். மாற்றத்திற்கு நீங்கள் தயாரா?