கேரளாவுக்கு மண் கடத்தல் தேனியில் அமைச்சர் ரகுபதி ஆட்கள் மாமுல் கேட்டு அடாவடி குவாரி அதிபர்கள் குமுரல்!

கடந்த மாதம் நடந்த சம்பவம் தேனி மாவட்டம் கம்பம் மெட்டு பகுதியில் போடி மெட்டு பகுதியில் கம்பெனி என்ற பெயரில் வசூல் வேட்டை நடந்தபோது எடுத்த படம் நான் குவாரிக்கு அனுமதி வாங்கியுள்ளேன். அதற்கு உண்டான ஆவணங்களும் ரசீது என்னிடம் உள்ளது பார்த்துக்கொள் அதேபோல் நீ வசூல் செய்வதற்கு ஏதாவது ஆவணம் உள்ளதா.
நான் அரசிடம் முறையாக அனுமதி பெற்று குவாரி நடத்தி வருகிறேன்.அப்படி நீங்கள் அரசிடம் அனுமதி வாங்கிய கடிதம் அல்லது ரசீது இருந்தால் நான் பணம் கட்டுகிறேன் இல்லையென்றால் பணம் கட்ட முடியாது என்று குவாரி அதிபர்களும் கம்பெனி என்ற பெயரில் உள்ள நபர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது நடந்த சம்பவம் ஒரு யூனிட்டுக்கு 500 ரூபாய் வீதம் 6 யூனிட்டுக்கு 3000 ரூபாய் கேட்கிறார்கள்.
நான் வீட்டில் உள்ள நகைகள் அடமானம் வைத்துக் குவாரி நடத்துகிறேன் இவ்வாறு நீங்கள் எங்களை மிரட்டிப் பணம் வசூலித்தால் நான் எங்கு முறையிடுவது ஆகவே நாங்கள் பத்திரிகையாளர் சந்தித்து செய்தி வெளியிடுகிறோம். உங்களால் தெரிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் இவ்வாறு நடந்த சம்பவம். மேலும் குவாரி அதிபர்களிடம் அன்றாடம் ஓட்டும் நடை சீட்டுகளுக்கு அன்றே பணம் கட்ட வேண்டுமாம் கனிமவளத்துறை மாவட்ட அதிகாரியிடம் புகார் செய்து உடனடியாக அந்தக் குவாரிக்கு அனுமதி சீட்டு வழங்க மறுத்து விடுவது.
இவ்வாறான செயல்களில் குவாரி அதிபர்கள் பயந்து போய் உடனடியாகப் பணம்  கட்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும் நடைச்சீட்டு வழங்குவது ஆன்லைனில் பதிவு செய்தால் உடனடியாகக் கிடைப்பதில்லை அதற்கு இரண்டு நாள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் கனிமவளத்துறை அதிகாரிக்கென்று கட்டிங் சீல் குத்துவதற்கு ஒரு கட்டிங், ஓஏவுக்கு ஒரு கட்டிங் ஓட்டுனருக்கு ஒரு கட்டிங், இப்படியாகக் குவாரி அதிபர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் அனுமதி தருவது மாவட்ட புவியியல் சுரங்கத்துறை அதிகாரி கிருஷ்ணன் மோகன் இதுபோக DEAA கமிட்டி, SEIAA கமிட்டி மாவட்ட வனத்துறை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என அழைத்துத் திரிந்து கொடுக்க வேண்டியவர்களுக்கு எல்லாம் கொடுத்து அனுமதி பெற்று குவாரி நடத்தினால் பெரியகுளம் ஆர்டிஓ ரஜத் பீடன் அவர்கள் ஆய்வு என்ற பெயரில் கனிம வளம் ஏற்றிச் செல்லும் வாகனத்தைச் சோதனையிட்டு கிராவல் பாஸ் தானே வாங்கி உள்ளது மண் அள்ளிச் செல்கிறீர்கள் என்றும் மண் வாங்கியுள்ளீர்கள். ஏன் கிராவல் எடுத்துச் செல்கிறீர்கள் என்றும் யூனிட் அளவு அதிகமாக உள்ளது என்றும் தொடர்ந்து குவாரி அதிபர்களை வழக்கு பதிந்தும் லாரிகளைப் பிடித்து வழக்கு போட்டும் தொடர்ந்து இந்தச் செயலைச் செய்து வருகிறார். இதனால் குவாரி அதிபர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். அரசு அனுமதி பெற்று புவியியல் சுரங்கத் துறை மற்றும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை யிட்டு மண் பரிசோதனை செய்தபின் தான் அனுமதி வழங்குகிறார்கள்.
ஆனால் என்னவோ வாகனத்தைச் சிறை பிடிப்பது மட்டும் அங்கே மண்வாரியாகப் பிரிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டு வருகிறது குவாரி அதிபர்களின் வேதனையும் துக்கமும் சொல்லி மாளாது தேனி மாவட்டத்தில் தேனி மாவட்ட கனிமவளத்துறை அதிகாரியிடமும் பெரியகுளம் ஆர்டிஓ ரஜப்பீடன் அவர்களையும் குவாரி அதிபர்களின் வாகனத்தைப் பிடிக்கும் முன் அனுமதி வழங்கிய புவியியல் சுரங்கத்துறை அதிகாரி கிருஷ்ணன் மோகனிடம் இந்தக் குவாரிக்கு எந்தெந்த வகையில் அனுமதி வழங்கி உள்ளது என விவரம் சேகரித்த பின்பு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்து வருகின்றன.
இது போகக் கேரள மாநிலத்திற்கு தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்களில் கனிம வளம் கடத்திச் செல்லப்படுகிறது. அதன் மேல் இதுமீது நடவடிக்கை எடுக்க இவர்கள் தயக்கம் காட்டுவதேன்?
மேலும் இரவும், பகலாகவும்  மற்றும் சர்வே நம்பர் மாற்றி எடுக்கும் நபர்கள்மீதும்  மேலும் கனிம வளங்கள் அளவுக்கு அதிகமாக எடுக்கும் அவர்கள்மீதும் திருட்டு மணல் ஓட்டு நபர்கள்மீதும் இவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை.
தமிழக அரசு அண்டை மாநி லத்துக்கு கனிம வளத் தைக்கடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்னவோ உண்மை தான்.
ஆனால் அளவுக்கு அதிகமான கனிம வளங்கள் கொள்ளை போகுவது தான் பொறுக்க முடியவில்லை மேற்கு தொடர்ச்சி மலை தேனி மாவட்டம் வறண்ட பூமியாக மாறுவது வெகுதொலைவில் இல்லை.
அவருக்கு இந்த ஆதாரங்களைப் போதுமானதாகத் தெரிவிக்கின்றனர்.
நமது சிறப்பு நிருபர்…