அரியலூர் நகராட்சி ஆணையர் என்ன செய்யப்போகிறார்?

அரியலூர் பேரூராட்சி பெரியார் நகர் 1 முதல் 5 வரை தினசரி செந்துறை சாலையில் உள்ள ஹோட்டல் கடைக்காரர்கள் தொடர்ந்து மூன்று, நான்கு நாட்கள் கழித்து விஷத்தன்மை உள்ள இலைகளைக் கொட்டி அதை நாய்கள் சாப்பிட்டு இறந்த வண்ணம் உள்ளது.

பலமுறை நகராட்சி ஆணையர் மற்றும் நிர்வாகத் திடம் தெரிவித்தும் அது கண்டு கொள்ளவில்லை இது தொடர்பாகச் செய்தித்தாள்கள் அண்ணா சிலையில் போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை. சாலைகள் மிகவும் ஏஜிஎம் திட்டத்தில் ஓராண்டுக்கு முன் பறிக்கப்பட்டு மழை பெய்தால் நடக்க முடியாத நிலை உள்ளது.

இதற்கு உடனே ஒரு ஆறு மாதத்திற்கு முன்பு நிர்வாகம் அமைதி பெற்று இரண்டு மாதத்திற்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டு மழைக்காலம் துவங் கப்பட்ட நிலையில் அதை வேலை செய்வதாகத் தெரியவில்லை இதற்கு அனைத்து பொதுமக்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.