அஜித் வழக்கு: அதிகார திமிரும் சிபாரிசும் இணைந்த போது ஒரு உயிரின் முடிவு!

அஜித் குமார் வழக்கு – தற்போது தமிழகத்தில் அதிகாரம், அரசியல் பின்னணி, சிபாரிசுகள் எப்படி ஒரு சாதாரண இளைஞனின் உயிரை விழுங்குகின்றன என்பதை வெளிப்படுத்தும் வெடித்தடமான விசாரணையாக மாறியுள்ளது.

முன்னாள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரான G.லதா, தற்போது மத்திய அரசில் IAS அதிகாரியாக பணியாற்றுகிறார். அவருடைய உத்தரவைத் தொடர்ந்து, ADGP டேவிட்சன், DSP சண்முக சுந்தரம், மற்றும் ஒரு சிறப்பு படை இணைந்து செயல்பட்டதுதான் இந்த அஜித் குமார் படுகொலைக்கான முதன்மை சூத்திரம் என கூறப்படுகிறது.

அஜித் மீது புகார் கொடுத்தவர் நிகிதா — அவரது தந்தை ஓய்வு பெற்ற Deputy Collector. இந்த அதிகாரியும், G.லதாவும் ஒரே காலகட்டத்தில் பணியாற்றியவர்கள் என்ற தகவலால் இந்த வழக்கு சிபாரிசின் விளைவாக நடந்த கொலை என பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

அஜித்துக்கு பொய்ப் புகாரில்:

  • கஞ்சா கடத்தல்

  • தங்க நகை திருட்டு

  • தீவிரவாத சந்தேகம் என பல வழக்குகள் FIR-ல் fabricate செய்யப்பட்டுள்ளன.

இது போல பொய் வழக்குகள் மூலம் தமிழ்நாட்டில் பல இளைஞர்களின் எதிர்காலம் FIR-யிலும், போலீஸ் டார்ச்சரிலும் சிதைந்துள்ளது. இது ஒற்றை சம்பவம் அல்ல. ஒரு பொதுவான காவல் துறை பழக்கமாகவே வளர்ந்து வருகிறது என்பது தான் இதன் அவலமான உண்மை.

கேள்விகள் எழுகிறது:

  • அதிகாரத்தால் நீதியை திசைதிருப்ப முடியுமா?

  • போலீசாரின் “இன்ஸ்டன்ட் ஜட்ஜ்மென்ட்” யாருக்குத் தேவையானது?

  • நீதிமன்றத்துக்கு முன் ஒரு இளைஞனுக்கு வாழ்க்கை இருந்ததா?

இவ்வாறு அதிகாரத்தால் அழிக்கப்பட்ட ஒரு உயிர்… நாளைய தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

மக்களே, இது தொடரவேண்டும் என்றால் மௌனமாக இருங்கள். மாற்றம் வேண்டும் என்றால் உங்கள் குரல் எழுங்கள்.