அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வருபவர் விஸ்வநாதன். இவர் செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வந்தார். இப்போது ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியில் தொடர்ந்து வருகிறார் இதற்கு இதை இவர்பற்றிய புகார் தொடர்ந்து நமது இரவுக்கு வந்த வண்ணமாக உள்ளது நாம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்…
இப்போது மேலும் சில தகவல்கள் கிடைத்தன. வெளியே சொல்ல முடியாத தகவல்கள் என்பதால் அதை வெளியிட விரும்பவில்லை.
ஆள் பார்த்தால் அப்பாவி மாதிரி தெரியும் ஆனால் அதி பயங்கரமான வேலை செய்யக்கூடிய ஒரு அதிகாரி தனது துறையில் பணிபுரியும் பெண்களை விட்டு வைப்பதே இல்லை.இதெல்லாம் நாங்கள் வெளியிடவில்லை வெளியிட்டால் நாறிப் போகும்.
இப்போது இவர் ஜெயங்கொண்டம் நகரில் ஆடம்பரமாக ஒரு வீடு வாங்கி உள்ளார். அதாவது தனது மகன் புவனேஸ்வரன் என்பவரைக் கார்டியனாக வைத்து விசுவநாதன் தனது பெயரில் ஒரு சொத்து ஒன்றை வாங்கி உள்ளார். இந்தச் சொத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என்று லேண்ட் புரோக்கர்கள் கூறுகின்றன. இந்தச் சொத்தைக் கலியபெருமாள் மகன் சோமசுந்தரம் என்ற நபரிடமிருந்து விஸ்வநாதன் க்ரைம் பெற்றுள்ளார் பட்டா நம்பர்.3292 ரூபாய் 18,87,200க்கு கிரையம் பெற்றுள்ளார் ஜெயங்கொண்டம் நகராட்சி அம்பேத்கார் நகர் சர்வே எண் இனம் ஒன்று 580/33 என்ற காலிமனையை வாங்கி உள்ளார் இந்தக் காலி மனையில் பத்து வருடங்களுக்கு முன்பு கட்டிய கட்டிடம் உள்ளது இதன் மதிப்பு 12 லட்சம் இந்தப் பத்திரத்தைப் பதிவு செய்யும்போது அரசுக்குச் சேர வேண்டிய கட்டணத்தைக் குறைத்து பத்திரம் பதிவு செய்துள்ளார் சார்பதிவாளர் ஜெயங்கொண்டம்.
அரசு அதிகாரியான விஸ்வநாதன் மற்றும் சார் பதிவாளர் பொறுப்பில் இருக்கும் அம்பிகா ஆகியோர் மீது அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
