பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் பூர்ணலதா. இவர் இதற்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து இந்த அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் பெற்று வந்துள்ளார்.
மிகவும் இளமையான இவர் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார். அதாவது ஒரு நாளைக்கு 150 க்கு மேற்பட்ட புதிய இரண்டு சக்கர வாகனங்கள் பதிவு செய்கிறார். இதன் பின்பு கார் லாரி ஆட்டோ மற்றும் கனரக வாகனங்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்கிறார்.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட எப்சி வாகனங்கள் லாரி, கார் ஆட்டோ மற்றும் கனரக வாகனங்கள் என்று அனைத்து வாகனங்களும் எப்சி பதிவு செய்கிறார்.
இதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம் இருக்கிறது இதோ பாருங்கள் ஒரு வாகனம் சோதனை செய்யக் குறைந்தபட்சம் இரண்டு சக்கர வாகனமாக இருந்தால் இரண்டு நிமிடம் எடுத்துக்கொண்டு அந்த வாகனத்தைச் சோதனை செய்து அனுப்ப வேண்டும்.
இதே போல் கார்களுக்கும் ஒரு வாகனத்திற்கு ஐந்து நிமிடம் எடுத்துக் கொண்டு அந்த வாகனத்தைச் சுற்றி சோதனை செய்து அனுப்ப வேண்டும் ஆனால் இதையெல்லாம் இவர் கடைபிடிக்கவில்லை பேப்பர் வந்ததா குடு வண்டி எங்கே நிற்கிறது ஓகே இந்த அப்படி என்று உடனடியாகப் பதிவு செய்கிறார் கையெழுப்பமிடுகிறார். ஆனால் வாகனத்தை முழுமையாகச் சோதனை செய்வது கிடையாது ஏதோ சோதனை பண்ணமா ஓடு என்ற அர்த்தத்தில் வேலை பார்த்து வருகிறார்.
ஒரே ஒரு மோட்டார் வாகன ஆய்வாளர் இந்த வாகனத்தை அனைத்தையும் சோதனை செய்து எப்சி செய்து பதிவு செய்ய முடியுமா என்று பாருங்கள். இதோடு இல்லாமல் பூர்ணலதா அவர்களை இங்கு உள்ள புரோக்கர்கள் தங்கள் வலையில் வீழ்த்தி விட்டனர் ஒரு நல்லதா அவர்களும் புரோக்கர் வலையில் விழுந்துவிட்டார்.
இங்கே புரோக்கர்கள் சொல்வதுதான் சட்டம் நேரடியாகச் சென்றால் எந்த வேலையும் நடக்காது இதோ இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள் இந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பொருளாதார சுற்றி எவ்வளவு புரோக்கர்கள் வட்டமிடுகிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்
பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு பணிபுரியப் பெரிய ஒரு தொகையைக் கொடுத்துத் தான் இந்தப் பதவிக்கு வந்துள்ளார் பூர்ணலதா இதுகுறித்து விரைவில் முழு விவரத்துடன் பார்ப்போம்.
