பத்திரப்பதிவு துறையில் மதுரை மண்டல துணைத் தலைவராகப் பதவி வகித்தவர் ரவீந்திரநாத் நாயுடு. இவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பின்பு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு ஜாமினில் வெளியே வந்தார் இப்போது மீண்டும் அதே பதவியில் அமரப் பல கோடிகளை இறைத்து வருகிறார். என்று தகவல்கள் தெரிவிக்கின்றன இதுகுறித்து ஒரு விரிவான அலசலைப் பார்ப்போம்.
01.ஆயிரத்து 700 ஏக்கர் சதுப்பு நிலங்கள் வனத் துறையிடம் 2007 முதல் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இதற்குப் பிறகும் 38 பதிவுகள் செய்யப்பட்டுள்ளது 429/2 சர்வே எண் அரசுப் புறம்போக்கு என்று தெரிந்தும் அதை வனத் துறையிடம் ஒப்படைத்த பின்பும் 2010 முதல் 2013 வரை 10 ஏக்கர் பதிவு செய்தனர் பதிவாளர்கள் ரவீந்திரநாத், மற்றும் ரகுமூர்த்தி. மேலும் இவர்கள் இருவரும் 2013-/14இல் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அபகரிக்கும் பொருட்டு இல்லாத, சர்வே எண் 657 / 3கி5 என்று ஒன்று உருவாக்கிச் செய்துள்ளனர். அதேபோல் இல்லாத சர்வே எண் 657 / 3கி6 என்று ஒன்று உருவாக்கி 1200 சதுரடிகளாகப் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் கூறுபோட்டு 10-க்கும் மேற்பட்ட பதிவு செய்துள்ளார்கள் ரகுமூர்த்தி. மற்றும் ரவீந்திரநாத் இவர்கள்மீதும் எந்த நடவடிக்கை எடுக்காமல் ரவீந்திரநாத் அமைச்சர் மூர்த்தியின் ஊரான மதுரை வடக்கு உதவி பதிவுத் துறை தலைவர் பதவியில் அமர வைத்து அழகு பார்த்தவர் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் விற்பனை
உயர் நீதிமன்ற சதுப்பு நிலம் சம்பந்தமான உத்தரவுகளுக்குப் பிறகு செப்டம்பர் 2021இல் பள்ளிக்கரணை சதுப்பு நில சர்வே எங்கள் அனைத்தும் வில்லங்கத்தில் சேர்க்கப்பட்டு, இந்தச் சர்வே எண்களில் எந்தப் பதிவும் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நடந்த தவறுகள் அனைத்தும் ஊர்ஜிதம் ஆகிவிட்டது. ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள அலுவலர்கள்மீது இன்று வரை குற்றவியல் நடவடிக்கையோ? துறை ரீதியாகப் பணிநீக்கமோ? பணியிடை நீக்கமோ? செய்யப்படவில்லை.
2.விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2013ஆம் ஆண்டு ஒரு பத்திரம் பதிவு செய்யப்படுகிறது. இதற்கான பத்தரத்தை கருவூலம் 2013 ஆம் ஆண்டு வாங்கப்படுகிறது ஒளிவருடல் ஸ்கேனிங் செய்யப்படுகிறது. பத்திர எண்: 555 8/வில்லங்கச் சான்றிதழ் 2013 ஆம் ஆண்டு முதல் துவங்குகிறது ஆனால் 2009 ஆம் ஆண்டுப் பதிவு செய்யப்பட்டதாக ஒரு போலியான பத்திரத்தை அப்போதைய சார்பதிவாளர் ரவீந்திரநாத் உருவாக்கினார் 2009 ஆம் ஆண்டு இருந்த சார்பதிவாளர் கையெழுத்தை போலியாக ரவீந்திரநாத் போட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு கருவூலத்தில் வாங்கப்பட்ட பத்திரம் எப்படி 2009 ஆம் ஆண்டுப் பதிவு செய்ய முடியும்?பின்பு ரவீந்திரநாத் போலியாகப் பதிவு செய்யப்பட்ட 2009 ஆம் ஆண்டுப் பத்திரத்தை மூல பத்திரமாக வைத்துக்கொண்டு இரண்டு பவர் பத்திரம், இரண்டு கிரயம் பத்திரம் பதிவு செய்துள்ளார். இந்த மோசடிகுறித்து விசாரணை செய்ய ஒரு மாவட்ட பதிவாளரை அரசு நியமனம் செய்தது. அந்த மாவட்ட பதிவாளர் இதுகுறித்து விசாரணை செய்யாமலேயே விடை பெற்று விட்டார்.
03. 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தைப் போலி ஆவணங்கள்மூலம் பத்திர பதிவு செய்த பதிவுத் துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது. சென்னையை சேர்ந்தவர் அமான் இவர் பதிவுத்துறை ஐஜியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் தாம்பரம் வரதராஜபுரத்தில் 85 சென்ட் இடம் எனக்குச் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை எனது தந்தை 1980 ஆம் ஆண்டு எனக்கு எழுதிக் கொடுத்து விட்டார். சமீபத்தில் இந்த நிலத்தை ஈசி போட்டுப் பார்த்தபோது எனது தந்தை இந்த நிலத்தைக் காந்தம்மாள் என்பவருக்கு விற்பனை செய்தது போலக் காட்டுகிறது.எனக்கு எனது தந்தை 1980 ஆம் ஆண்டு எழுதிக் கொடுத்தார்.
ஆனால் 1987-ம் ஆண்டு எனது தந்தை அந்த நிலத்தைக் காந்தம்மாள் என்பவருக்கு எழுதிக் கொடுத்ததைப் போல ஆவணங்களைத் தயார் செய்து போலியாகப் பதிவுத்துறை ஆவணங்களில் மாற்றம் செய்து 85 சென்ட் இடத்தைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலத்தின் தற்போதைய மார்கெட் மதிப்பு 10 கோடி ரூபாய் ஆகும். இந்த நிலையில் ஒரிஜினல் ஆவணங்கள் என்னிடம் உள்ள நிலையில் போலியாகப் பத்திரங்கள் தயார் செய்யப்பட்டு பத்திரப்பதிவு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதோடு போலியாகப் பதிவு செய்த ஆவணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் உத்தரவிட்டிருந்தார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் புகாரில் கூறப்பட்டிருந்ததைப் போலத் தவறு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் விசாரணை நடத்த பதிவுத்துறை தலைவர் அப்போதைய டிஜிபி சங்கர் ஜுவாலுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவிட்டார். சிபிசிஐடி ஐ.ஜி. அன்பு உத்தரவின் பேரில் எஸ்.பி. வினோத் சாந்தாராம் மற்றும் டிஎஸ்பி புருஷோத்தமன் ஆகியோர் தலைமையில் கொண்ட தனிப்படை போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.
தீவிர விசாரணை நடத்தப்பட்டபோது சேலம் பதிவுத்துறை டிஐஜியாக இருக்கும் ரவீந்திரநாத் தென் சென்னை உதவி ஐ.ஜி.யாகப் பணியாற்றியபோது இந்தத் தவறு நடந்திருப்பதும் அவரே அதில் அவருடைய விரல் ரேகையைப் பதிவு செய்து லாகின் செய்து ஆவணங்களைப் பதிவேற்றம் செய்திருப்பதையும் கண்டுபிடித்தனர்.
அதைத் தொடர்ந்து சேலத்தில் டி.ஐ.ஜி அலு வலகத்தில் பணியில் இருந்த ரவீந்திரநாத்தை டிஎஸ்பி புருஷோத்தமன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரைச் சென்னைக்கு அழைத்து வந்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் பல்வேறு முக்கிய நபர்கள் இந்த விஷயத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதனையடுத்து இரவு சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து டி.எஸ்.பி. புருஷோத்தமன் அவரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்குப் பின்பு அவர் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்ற காவலுக்கு உட்ப டுத்தி சிறையில் அடைத்தனர். எட்டு முறை வில்லங்க சான்றிதழ் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது
04. திருவெற்றியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரவீந்திரநாத் மீது எஃப் ஐ ஆர் உள்ளது.
திருவெற்றியூர் சார்பதிவாளர் பொறுப்பில் பணி செய்தபோது மோசடியில் சிக்கியவர் ரவிந்திரநாத் எப்படி என்று பார்ப்போம்
தொடரும்…..
