2022 ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவம்குறித்து நமது இதழில் தொடர்ச்சியாகச் செய்தி வெளியிட்டு வந்தோம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சென்னை கொரட்டூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் பாலமுருகன் நமது பத்திரிகை ஆசிரியர்மீது மூன்று வழக்குகள் துவங்கினார்.ஆனாலும் அவரால் நிரூபிக்க முடியவில்லை இந்த மோசடியைச் செய்தது பாலமுருகன் இதுகுறித்து அம்பத்தூர் நீதிமன்றம் பாலமுருகன் மீது வழக்கு பதிய வேண்டும் என்று உத்தரவிட்டு வந்தது.
ஆனால் கொரட்டூர் ஆய்வாளர் கண்டுகொள்ளவே இல்லை பின்பு உயர்நீதிமன்றமும் பாலமுருகன் மீது விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனாலும் இந்த உத்தரவையும் கொரட்டூர் காவல் ஆய்வாளர் கண்டுகொள்ளவில்லை அதேபோல் அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் இவருக்குத் துணையாகச் செயல்பட்டவர் இதுகுறித்து நமது இதல் விரிவான செய்தி வெளியிட்டு இருந்தோம் இந்த மோசடிக்குத் தலைவர் யார் என்றால் அது பாலமுருகன் மட்டுமே கைதானவர்களை விசாரித்தால் அனைத்து உண்மைகளும் வந்துவிடும்
தமிழ்நாட்டில் குடிசை இல்லாத நகரங்களை ஏற்படுத்தும் நோக்கில் 1970 ஆம் ஆண்டில் குடிசை மாற்று வாரியம் ஏற்படுத்தப்பட்டது. இது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் என அண்மையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
புதிய வீடுகளைக் கட்டிக் கொடுப்பது மீள்குடியேற்றம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எப்படியாவது சென்னையில் ஒரு சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்று நினைக்கும் ஏழை மக்களின் கனவுகள் தமிழ்நாடு குடிசை மாற்று வசதி வாரியத்தின் மூலம் நிறைவேறி வருகின்றது.
பலரின் கனவுகளை நினைவாக்கிய குடிசை மாற்று வாரியத்தின் பெயரைப் பயன்படுத்தி ஒரு மோசடி கும்பல் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி இருப்பதாகச் சென்னை காவல் ஆணையருக்கு புகார் வந்துள்ளது. அந்தப் புகாரைக் கொடுத்தவர் முத்துலட்சுமி, சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர்.
குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்க ஆசைப்பட்ட முத்துலட்சுமியை அயனாவரத்தைச் சேர்ந்த பரணிதரன், சேத்துப்பட்டு சேர்ந்த ரோகினி பிரியா உட்பட மேலும் சிலர் சந்தித்திருக்கின்றன. தங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் உள்ள உயர் அதிகாரிகளைத் தெரியும் எனவும் வீடு ஒதுக்கீடு பெற்று தருவதாகவும் அவர்கள் ஆசை வார்த்தையைக் கூறி இருக்கிறார்கள். இதனை முத்துலட்சுமியும் உண்மையென நம்பி இருக்கிறார். அவர்கள் கூறியது போலவே சில தினங்களில் முத்துலட்சுமி பெயரில் வீடு ஒதுக்கீடு ஆணையையும் கொடுத்துள்ளனர். சொன்னது போலவே வீட்டை வாங்கி கொடுத்து விட்டார்கள் எனப் பூரித்துப்போன முத்துலட்சுமி அந்தக் கும்பல் கேட்ட
3,50,000 பணத்தை கொடுத்து இருக்கிறார். வீடு கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கையில் முத்துலட்சுமி அந்த ஆணையை எடுத்துக்கொண்டு குடிசை மாற்று வாரியத்துக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போதுதான் அது போலி ஆணையெனத் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ந்து போன முத்துலட்சுமி அந்தக் கும்பலைத் தொடர்பு கொண்டு கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். பணத்தை திருப்பித் தர மறுத்ததோடு அந்தக் கும்பல் முத்துலட்சுமிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளது.
இதனால் பயந்து போன முத்துலட்சுமி மோசடி கும்பலிடமிருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார், இதை அடுத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா மேற்பார்வையில், உதவி ஆணையர் காயத்ரி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முத்துலட்சுமியிடம் பண மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது, மேலும் இதே போல் 200 பேரிடம் ரூபாய்.5 கோடிவரை பண மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதை எடுத்துப் பரணிதரன், ரோகினி பிரியா மற்றும் அவர்களது கூட்டாளி அப்துல் நாசர், அயனாவரம், ரேவதி மற்றும் அம்பத்தூர் கஜேந்திரன் அவருடைய மனைவி சாமுண்டீஸ்வரி ஆகிய ஆறு பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடி வழக்கில் மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தனி படை அமைத்துப் போலீசார் தேடி வருகின்றன.
