பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை வங்கி முடக்கிய பிறகு பணம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் சொத்தை விற்பனை செய்த சம்பவம் பதிவுத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தப் பரபரப்பு அடங்கும் முன் நடந்ததை பார்ப்போம்:
கடலூர் நகரில் முக்கியமான பகுதிதான் வடக்குத்து. இந்தப் பகுதியில் உள்ள நிலத்தின் தற்போதைய மதிப்பு ஏக்கருக்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடிவரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் பிரகாஷ் சந்த் ஜெயின் என்பவருக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.300 கோடிக்கு மேல் விற்பனையாகும். இந்தச் சொத்தைப் பிரகாஷ் சந்த் ஜெயின், வங்கியில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தவில்லை இவர், கடலூர் மட்டுமல்லாது காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஏராளமான நிலங்கள் வாங்கி குவித்துள்ளார் இந்தச் சொத்துக்கள் குறித்து வருமான வரித்துறை இவ்வளவு நாள் நக்கி கிட்ட இருந்தது இந்தநிலையில் கடலூர் வடக்குத்து என்ற பகுதியில் உள்ள நிலத்தைப் பிரகாஷ் சந்த் ஜெயின், எஸ்பிஐ வங்கியில் அடமானம் வைத்துப் பல கோடி கடன். வாங்கியுள்ளார் அந்தப் பணத்தை திருப்பிக் கட்டாததால், அந்தச் சொத்தை வங்கி அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இதை விற்பனை செய்யக் கூடாது என்று கடலூர் பதிவுத்துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்து ள்ளனர். இந்தநிலையில், வங்கியின் தகவலை மீறிப் பதிவுத்துறை அதிகாரிகள், பிரகாஷ் சந்த் ஜெயின், ஜெயப்பிரியா சிட்பன்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கு முதல்முறையாகப் பொது அதிகார பத்திரம் செய்து கொடுத்துள்ளனர். தற்போது அந்தச் சொத்தை அந்த நிறுவனத்திற்கே விற்பனை செய்யப் பிரகாஷ் சந்த் ஜெயின் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
.
இது தெரிந்ததும், வங்கி அதிகாரிகள் பதிவுத்துறை உயர் அதிகாரியான கடலூர் மண்டல பத்திரப்பதிவுத்துறை தலைவர் கவிதா ராணி அவர்களிடம் புகார் செய்துள்ளனர்.இந்தத் தகவல் தெரிந்ததும், உளவுத்துறை போலீசாரும் கடலூரில் முக்கிய பகுதியில் உள்ள நில விற்பனை தொடர்பாகக் கவிதா ராணி மற்றும் உயர் அதிகாரிகளுக்குப் புகார் தெரிவித்திருந்தனர். இதனால் உளவுத்துறை அதிகாரிகள், இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருந்தனர்.
இது தெரிந்ததும், கடலூர் பகுதியின் டிஐஜி கவிதா ராணி, மாவட்ட பதிவாளர் தனலட்சுமி ஆகியோரை நேரில் அழைத்து, எச்சரிக்கை செய்து அனுப்பியிருந்தனர்.
ஆனாலும் கவிதா ராணி தனலட்சுமி ஆகியோர் இணைந்து இந்த மோசடி வேளையில் பழைய திட்டம் போட்டனர் இதில் அடுத்த கட்டமாகக் கடலூர் சார்பதிவாளர் பதவி காலியாக இருந்ததால், மலர்கொடி என்பவரை 15 நாட்களுக்கு முன்பு தனலட்சுமி கவிதா ராணி இருவரும் சேர்ந்து பணி நியமனம் செய்தனர் ஆனால் அவர் பணியில் உடனடியாகச் சேர வேண்டாமென மாவட்ட பதிவாளர் மலர்கொடி வாய்மொழியாக உத்தரவிடுகிறார் அதற்குள். தனக்கு வேண்டிய உதவி யாளர் சுரேஷ் என்பவரை நியமித்து, பதிவு பணிகளைக் கவனிக்கும்படி கூறியுள்ளார். மேலும் இந்தப் பத்திரத்தைப் பதிவு செய்யவும் உத்தரவிடுகிறார் இவரது உத்தரவைப் பயந்து கொண்டு சுரேஷ் பதிவு செய்கிறார்.
மேலும் மலர்கொடியின் கணவர், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முக்கிய பதவியில் இருப்பதால் அவர் சொல்வதை மீறி அந்தப் பகுதியில் பதிவுத்துறையில் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், உளவுத்துறை எச்சரி க்கை மற்றும் பதிவுத்துறை உயர் அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி எஸ்பிஐ வங்கி முடக்கி வைத்திருந்த சொத்தைப் பிரகாஷ் சந்த் ஜெயின் விற்பனை பதிவை அதிகாரிகள் கவிதா ராணி தனலட்சுமி சுரேஷ் செய்துள்ளனர்.
இது கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. இதுகுறித்து சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஆகிய துறைக்குப் புகார் அனுப்பியுள்ளார்கள் இந்தப் புகார்குறித்து கடுமையான நடவடிக்கையை சிபிஐ செய்யப்போகிறது இதில் கவிதா ராணி தனலட்சுமி மற்றும் சுரேஷ் விரைவில் கைதாவார்கள் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் இந்தப் புகாரியிலிருந்து கவிதா ராணி தப்பித்து விடுவார், தனலட்சுமி தப்பித்து விடுவார் மாட்டுவது சுரேஷ் மட்டுமே ஏனென்றால் இதுபோல் ஒரு புகார் சென்னை தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது இந்தப் புகாரில் உதவியாளர் மணிமொழியின் மாட்டிக்கொண்டார் ஆனால் உத்தரவு வழங்கி மற்றும் ஈசியில் பெயர் திருத்தம் செய்த ரவீந்திரநாத் சேலம் மண்டல பத்திரப்பதிவு தலைவர் கடைசியில் மணிமொழியின் கொடுத்த வாக்குமூலம் படி ரவிதர்நாத் கைது செய்யப்பட்டார் ஆனாலும் இந்த வழக்கிலிருந்து நழுவி விடுகிறறார்.
கடலூர் மண்டல பத்திரப்பதிவு தலைவர் கவிதா ராணி முன்பு திருநெல்வேலி மாவட்டத்தில் சார் பதிவாளராக இருக்கும்போது விலை மதிப்பு நிர்ணயம் செய்ததில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளார் இதற்குப் பல கோடி ரூபாய் கையூட்டும் பெற்றுள்ளார் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் உள்ளது ஆனால் இந்தப் புகாரை எல்லாம் பெரிதுபடுத்தாமல் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இந்தக் கவிதா ராணிக்கு பதவி உயர்வு கொடுத்தார் முதலில் வருமான வரித்துறை சிபிஐ ஆகிய இரு துறைகளும் அமைச்சர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை செய்ய வேண்டும்.
