இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சி வளர்ச்சி அடையவில்லையா?

சமீபத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சருக்குக் கே.என். நேரு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியது கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழக அரசு திட்டங்களில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது. முதலமைச்சர் திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களுக்குச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
அன்றைய மாவட்ட ஆட்சியர் இதைச் சொன்னார். அதற்கான விளக்கங்களையும் நாங்கள் தந்திருக்கிறோம். திருச்சி வளர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை திருச்சியில் உள்ள நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வோம்.

மற்றவர்கள் சொன்னால்? நாங்கள் வளர்ந்திருக்கிறோம். முதலமைச்சர் திருச்சி மாவட்டத்திற்கு மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களுக்குச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
அதை வைத்துத் துணிந்து மக்களிடம் செல்வோம். தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு மணப்பாறை சிப்காட்டில் புதிய நிறுவனம் வரப்போகிறது.

அந்த நிறுவனம் அமைந்த பிறகு, திருச்சி முகமே மாறும் எனத் தொழில் அதிபர் சொல்லியிருக்கிறார்கள். அரசு அதிகாரிகளும் சொல்லியிருக்கிறார்கள்.
2026-ல் நாங்கள்தான் நிற்கிறோம், நாங்கள்தான் ஜெயிப்போம். தளபதி மீண்டும் முதல்வர் ஆவார். டெல்டாவில் மிகவும் அதிகமாகத் தொகுதிகளை வென்று கொடுப்போம். இவ்வாறு கே.என். நேரு கூறினார்.
மூத்த அமைச்சர் அண்ணன் நேரு அவர்கள் கூறியது போலத் திருச்சி மாவட்டத்திற்கு 35 ஆயிரம் கோடி நிதி வந்தது என்றால் அதை எந்தெந்த திட்டத்திற்கு செலவு செய்து உள்ளீர்கள் என்பதை பட்டியல் தந்தால் அந்தச் செலவு யாரால் எதற்காகச் செய்யப்பட்டது யாருடைய வசதிக்காகச் செய்யப்பட்டது என்று கூற முடியும் மேலும் மணப்பாறை வட்டத்தில் சிப்காட் வருவதாகவும் அப்படி வரும் பட்சத்தில் 5000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று அண்ணன் கே.என். நேரு அவர்கள் கூறுகிறார் ஆனால் நேரு அவர்களே சிப்கார்ட்டில் அமையும் நிறுவனம் நேரடியாக மக்களுக்குப் பணி வழங்குமா அல்லது மேன் பவர் ஏஜென்சி மூலம் வழங்குமா மேலும் இது தமிழர்களுக்குக் கிடைக்குமா என்பதை நேரு அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

திருச்சி மாநகராட்சி சுற்றி தூய்மையான குடிநீர் மக்களுக்குச் செல்லவில்லை ஆங்காங்கே சாக்கடை கழிவுநீர் கலந்து தான் செல்கிறது இதைத் தடுப்பதற்கு மாநகராட்சியால் முடியவில்லை இதோடு இல்லாமல் பாதாள சாக்கடை திட்டம் ஆங்காங்கே முடியாமல் அறையும் குறையுமாகக் காட்சியளிக்கிறது.
கழிவுநீர் செல்வதற்கு வசதி இல்லை இதை டேங்கர் களில் நிரப்பிக் கொண்டு போய்க் காவேரி கரையில் இறக்கி விடுகிறார்கள் இதனால் மாசு ஏற்படுகிறது.- இதற்குச் சரியான திட்டத்தை உருவாக்கவில்லை இதற்கெல்லாம் அண்ணன் நேரு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்