திராவிடர்களுக்கு பெரியார் அறக்கட்டளை இருப்பது போல் தமிழர்களுக்கு ஏன் இல்லை?

தமிழ் வரலாற்று ஆய்வாளர் சீதையின் மைந்தன் அவர்கள் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வள்ளலார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பூர்வீக தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் பேசியதாவது, அனைவருக்கும் வணக்கம்
லண்டனிலிருந்து வந்த தமிழர் திருமுல்லைவாசன் அவர்கள் ஒரு கருத்தினை கூறியிருந்தார் லண்டனிலிருந்து நான் சில பணிகளைச் செய்து வருகிறேன் என்று திருமுல்லைவாசன் அவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் இந்தத் தெலுங்கர்கள் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வாறு செய்யவில்லை வெளிநாட்டிலும் தமிழர் சங்கம் என்று வைத்துக்கொண்டு அதனைத் தெலுங்கர்கள் நடத்தி வருகிறார்கள் அதில் ஒரு சங்கத்தின் மூலமாக எனக்கு மிகப்பெரிய பிரச்சனையே வந்தது அச்சங்கத்தின் பெயர் தமிழ் சங்கம் லண்டன் தலைவர் பெயர் ஸ்ரீனிவாச ராவ் லண்டனில் இயங்கி வருகிறது.
இச்சங்கத்தினை பற்றி எனக்குத் தெரிய வந்தவுடன் நான் நேரடியாகத் தொலைபேசி மூலமாகவே அவரைத் தொடர்பு கொண்டேன் தெலுங்கராகிய நீங்கள் எதற்காகத் தமிழ்ச் சங்கம் நடத்தி வருகிறீர்கள் என்று நான் கேள்வி எழுப்பினேன் தாங்கள் தமிழர் இல்லை என்பதால் முதலில் இச்சங்கத்தை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அதற்குப் பிறகு அச்சங்கம் கலைக்கப்பட்டது இதனாலேயே நான் இந்த வெளிநாட்டில் இயங்கி வரும் தமிழ்ச் சங்கங்கள் அனைத்தையும் கண்காணித்து வருகிறேன், இதில் சிலர் தெலுங்கர்கள் ஆகவும் கன்னடர்களாகவும் இருந்து கொண்டு தமிழ் சங்கம் நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசு மன்னர்களுக்குச் சதய விழா நடத்தி உள்ளது இது தொடர்பாகத் தெலுங்கர் முன்னேற்றக் கழகம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது அது என்னவென்றால் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு சதய விழா நடத்திய முதல்வருக்கு நன்றி. அதில் ராஜராஜ சோழனை தெலுங்கர் குல தென்றல் மன்னன் என்று கூறியுள்ளனர், எப்படி மாற்றுகிறார்கள் என்று பாருங்கள் தெலுங்கர்களுக்கும், தமிழர்களுக்கும் என்ன சம்பந் தம் ஏன் வரலாற்றை மாற்றுகிறார்கள்.
இது போன்று அறிக்கைகளில் வெளியிடுவதற்கு எதிராக நாம் குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுதுதான் வரலாற்றை மாற்றும் இது போன்றவர்களை நாமால் தடுத்து நிறுத்த முடியும் அதே போன்று தற்போது நம் கட்சி திமுகவை அதிகம் எதிர்க்கிறது என்று பேசுகிறார்கள் ஏனென்றால் 2006ல்யிருந்து 2011 வரை அப்பொழுது கருணாநிதி செய்த தவறுகளை நான் எதிர்த்து நாளிதழ்களில் எழுதி இருக்கிறேன். அதற்காக என்மீது ஆறு வழக்கு தொடர்ந்தார்கள் அது அனைத்தையும் நான் சந்தித்து வெளியே வந்து விட்டேன் யார் மூலமாகவது எனக்குக் குடைச்சொல் கொடுத்துக் கொண்டே தான் இருந்தார் கருணாநிதி. அதனாலேயே தற்போது நான் என்ன செய்கிறேன் என்றால் குடைச்சல் கொடுப்பவர்கள்மீது வழக்கு துவங்கி வருகிறேன் எனது பாதையை மாற்றி விட்டார்கள். அதில் ஒன்றுதான் பஞ்சமி நிலம் தொடர்பாக வழக்கு தொடர்ந்து உள்ளேன் ஹை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது ஐஏஎஸ் அதிகாரி அவரும் தெலுங்கர் தான் அவர்மீதும் வழக்கு தொடர்வேன் 2000 கோடி ஊழல் செய்த அவர்மீது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது

இதுபோலப் பலவழக்கு நம் தமிழர்கள்மீது தொடர்வார்கள் யாரும் பயப்படாதீர்கள்! ஒரு வழக்கு ரெண்டு வழக்கினை சந்தித்த பிறகு நாமே வழக்கறிஞர்போல் மாறிவிடலாம். எனக்கும் கூட ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றம் இருந்து நீதிமன்றத்தைப் பார்த்துப் பயந்தேன் நீதிபதியைப் பார்த்துப் பதட்டப் பட்டேன், தற்பொழுது நானே வழக்கறிஞர்போல் வாதாடிக் கொள்கிறேன் பேருக்குத்தான் வழக்கறிஞர் வைத்துள்ளேன் இதில் என்னவென்றால் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் அதுவே நம் நோக்கமாக இருக்க வேண்டும் அய்யாவை சிறையில் தள்ளியது யாரு ஈவே ராமசாமி என்கிற வடுக நாயக்கன் அவருடைய சொத்துப் பட்டியல் என்ன தெரியுமா 2000 கோடி பெரியார் அறக்கட்டளையின் சொத்து.

அந்த 2000 கோடி சொத்தை அவர் இனமான தெலுங்கர்கள் இயக்குகிறார்கள் திமுக விற்கு துதி பாட 450 இயக்கங்கள் உள்ளது சின்ன சின்னக் கட்சிகளும் அடங்கும் திமுகவிற்கும் இந்த இயக்கங்களுக்கும் அண்டர்ஸ்டாண்டிங் உள்ளது
இந்த இயக்கங்கள் செய்யும் வேலைகளுக்குப் பணம் எங்கிருந்து போகிறது என்றால் இந்தப் பெரியார் அறக்கட்டளையிலிருந்து தான் போகிறது தெலுங்கர்கள் மட்டுமில்லாமல் பிற மொழியாளர்களும் இந்த இயக்கங்களில் செயல்பட்டு வருகிறார்கள் அவர்களுக்குத் தலைமை திமுக ஆகும்
தற்போது தம்பி பேசும்போது கூடச் சிறைக்கு சென்று விட்டால் குடும்பத்தைக் காப்பாற்ற ஆளில்லை என்றார் இது வேதனையாக உள்ளது, ஆனால் திராவிடர்கள் சிறைக்கு சென்றால் அவர்களின் குடும்பத்தைக் காப் பாற்ற பெரியார் அறக்கட்டளை உள்ளது.

இது போன்று ஒரு அமைப்பு நமக்கு வேண்டும் தமிழர் குடி மக்கள் போராடி சிறைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டால் அவர்களது குடும்பத்தைக் காப்பாற்ற இது போன்ற இயக்கங்கள் தேவை அதை நாம் உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் நிலையாக நிற்க முடியும் இதை நாம் செய்ய வேண்டும் நேரமின்மையின் காரணமாக நிறைய விடயங்களை என்னால் இங்குப் பேச முடியவில்லை. பத்திரிக்கை துறையின் நீண்ட காலமாகப் பயணிப்பதால் நான் ஆய்வு செய்து நிறைய உண்மைகளை எடுத்து வைத்துள்ளேன் அவை அனைத்தையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு ஆசைதான் ஆனால் தற்போது நேரம் இன்மையின் காரணமாக என்னால் பகிர முடியவில்லை எனவே இத்துடன் எனது உரை யை முடித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார்