அரியலூர் ஊராட்சிகளில் ஒரு கோடி ரூபாய் ஊழல்? – இன்சுலேட்டர் திட்டம் மத்தியிலும் முறைகேடு!

அரியலூர் மாவட்டம் – 2021ஆம் ஆண்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரமண சரஸ்வதி அவர்கள், மகளிர் கழிவறைகள் மற்றும் சேவை மையங்களுக்கான இன்சுலேட்டர் பொருத்தும் திட்டத்திற்காக அரசு ஆணை பிறப்பித்திருந்தார்.

இத்திட்டத்தில், ஒப்பந்தக் கொள்கைகளை பின்பற்றி 45 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் எனவும், 21 ஊராட்சிகளுக்காக மொத்தம் ₹1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்திருந்தும், அந்த இன்சுலேட்டர்கள் பயனற்ற இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன என்பது தற்போது வெளியாகிய உண்மை.

சிறப்பு ஆய்வு செய்த நமது பத்திரிகையினர், கீழ்கண்ட முக்கிய ஊராட்சிகளில் நடந்துள்ள செயல்முறைகளை வெளியிட்டுள்ளனர்:

  1. வாரணவாசி ஊராட்சி – இன்சுலேட்டர், ஊராட்சி அலுவலக டேபிளில் வைத்திருக்கப்பட்டுள்ளது.

  2. கோவிந்தபுரம் ஊராட்சி – பெண்கள் கழிவறை இல்லாத இடத்தில், மாணவிகள் பயன்படுத்தும் பள்ளியில் தரை மட்டத்தில் பயனற்றவாறு பொருத்தப்பட்டுள்ளது.

  3. எழுத்து காராம்பட்டி ஊராட்சி – சேவை மையத்தின் நடுவே, அஞ்சல் பெட்டி போல தொங்கவிடப்பட்டு, முற்றிலும் தேவையற்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் “சாமி சாமி எலக்ட்ரிக்கல்ஸ்” மற்றும் திண்டுக்கல் அடையாளமற்ற நிறுவனங்கள் மூலம் வேலை செய்யப்பட்டது. தலா ₹49,500 வீதம் செலவு காட்டப்பட்டுள்ளதுடன், எந்தவொரு சரியான பிட்டிங், இருப்பு பதிவேடு, பிஎஸ்‌சி ஒப்புதல் போன்ற சட்டப்பூர்வ பதிவுகளும் இல்லை.

இந்நிலையில், மக்கள் வரிப்பணத்தில் நேரடியாக கொள்ளை நடைபெற்றுள்ளதாக, மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக விசாரணை செய்து, முறைகேடு நடைபெற்றுள்ள ஊராட்சிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என நமது சிறப்பு நிருபர் கோருகிறார்.