முக்கிய செய்திகள்

ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் சொத்து பட்டியல் PART-2

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வருபவர் விஸ்வநாதன். இவர் செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வந்தார். இப்போது ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியில் தொடர்ந்து வருகிறார் இதற்கு இதை இவர்பற்றிய புகார் தொடர்ந்து நமது இரவுக்கு வந்த வண்ணமாக உள்ளது நாம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்… இப்போது மேலும் சில தகவல்கள் கிடைத்தன. வெளியே சொல்ல முடியாத தகவல்கள் என்பதால் அதை வெளியிட விரும்பவில்லை. ஆள் பார்த்தால் அப்பாவி மாதிரி…

மேலும் படிக்க

அரியலூர் நகராட்சி ஆணையர் என்ன செய்யப்போகிறார்?

அரியலூர் பேரூராட்சி பெரியார் நகர் 1 முதல் 5 வரை தினசரி செந்துறை சாலையில் உள்ள ஹோட்டல் கடைக்காரர்கள் தொடர்ந்து மூன்று, நான்கு நாட்கள் கழித்து விஷத்தன்மை உள்ள இலைகளைக் கொட்டி அதை நாய்கள் சாப்பிட்டு இறந்த வண்ணம் உள்ளது. பலமுறை நகராட்சி ஆணையர் மற்றும் நிர்வாகத் திடம் தெரிவித்தும் அது கண்டு கொள்ளவில்லை இது தொடர்பாகச் செய்தித்தாள்கள் அண்ணா சிலையில் போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை. சாலைகள் மிகவும் ஏஜிஎம் திட்டத்தில் ஓராண்டுக்கு முன் பறிக்கப்பட்டு…

மேலும் படிக்க

கேரளாவுக்கு மண் கடத்தல் தேனியில் அமைச்சர் ரகுபதி ஆட்கள் மாமுல் கேட்டு அடாவடி குவாரி அதிபர்கள் குமுரல்!

கடந்த மாதம் நடந்த சம்பவம் தேனி மாவட்டம் கம்பம் மெட்டு பகுதியில் போடி மெட்டு பகுதியில் கம்பெனி என்ற பெயரில் வசூல் வேட்டை நடந்தபோது எடுத்த படம் நான் குவாரிக்கு அனுமதி வாங்கியுள்ளேன். அதற்கு உண்டான ஆவணங்களும் ரசீது என்னிடம் உள்ளது பார்த்துக்கொள் அதேபோல் நீ வசூல் செய்வதற்கு ஏதாவது ஆவணம் உள்ளதா. நான் அரசிடம் முறையாக அனுமதி பெற்று குவாரி நடத்தி வருகிறேன்.அப்படி நீங்கள் அரசிடம் அனுமதி வாங்கிய கடிதம் அல்லது ரசீது இருந்தால் நான்…

மேலும் படிக்க

அஜித் வழக்கு: அதிகார திமிரும் சிபாரிசும் இணைந்த போது ஒரு உயிரின் முடிவு!

அஜித் குமார் வழக்கு – தற்போது தமிழகத்தில் அதிகாரம், அரசியல் பின்னணி, சிபாரிசுகள் எப்படி ஒரு சாதாரண இளைஞனின் உயிரை விழுங்குகின்றன என்பதை வெளிப்படுத்தும் வெடித்தடமான விசாரணையாக மாறியுள்ளது. முன்னாள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரான G.லதா, தற்போது மத்திய அரசில் IAS அதிகாரியாக பணியாற்றுகிறார். அவருடைய உத்தரவைத் தொடர்ந்து, ADGP டேவிட்சன், DSP சண்முக சுந்தரம், மற்றும் ஒரு சிறப்பு படை இணைந்து செயல்பட்டதுதான் இந்த அஜித் குமார் படுகொலைக்கான முதன்மை சூத்திரம் என கூறப்படுகிறது. அஜித்…

மேலும் படிக்க

அரியலூர் ஊராட்சிகளில் ஒரு கோடி ரூபாய் ஊழல்? – இன்சுலேட்டர் திட்டம் மத்தியிலும் முறைகேடு!

அரியலூர் மாவட்டம் – 2021ஆம் ஆண்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரமண சரஸ்வதி அவர்கள், மகளிர் கழிவறைகள் மற்றும் சேவை மையங்களுக்கான இன்சுலேட்டர் பொருத்தும் திட்டத்திற்காக அரசு ஆணை பிறப்பித்திருந்தார். இத்திட்டத்தில், ஒப்பந்தக் கொள்கைகளை பின்பற்றி 45 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் எனவும், 21 ஊராட்சிகளுக்காக மொத்தம் ₹1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்திருந்தும், அந்த இன்சுலேட்டர்கள் பயனற்ற இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன என்பது தற்போது வெளியாகிய உண்மை. சிறப்பு ஆய்வு…

மேலும் படிக்க

ரிதன்யா மரணம் – பாசத்துக்கும் பாசாங்குக்கும் இடையே ஒரு உயிர் மடிந்தது!

ரிதன்யா – அழகான தமிழ் பெயர், விஜய் டிவி புகழின் மகளின் பெயராகவும் பரிசில் கிடைத்தது. ஆனால், இன்று அந்த பெயர் தமிழகமெங்கும் ஒரு மன வேதனையின் சின்னமாக பேசப்படுகிறது. அவள் ஒரு மதிப்புமிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவள். தந்தையின் பாசத்தால் வளர்க்கப்பட்டு, ஐந்து கோடியே மதிப்பிலான மணவிழாவில் பாசத்தோடு கட்டிக்கொடுக்கப்பட்டாள். ஆனால் அந்த பாசமும், அதன் பின்னனியிலிருந்த மறைந்த patriarchal culture-ஐ யாரும் கவனிக்கவில்லை. திருமணமான மூன்றாவது வாரமே சிக்கல்கள் தொடங்கின. கணவனின் குடும்பத்திலிருந்த அழுத்தங்கள்,…

மேலும் படிக்க

முதலில் பாஜகவிடம் அடகு வைத்த கட்சியை மீட்டெடுங்கள் – பிறகு தமிழக மீட்பு பேசுங்கள்!

“தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் நகர்ந்து வரும் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு முழுமையான எதிர்க்கட்சியாக செயல்படாதது குறித்து விளக்கம் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தமிழகம் எப்போது, எங்கே, யாரால் அடகு வைக்கப்பட்டது என்பது குறித்து விளக்கமே இல்லாமல், இப்போது மீட்பு பேச்சு பேசுவது மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்புகிறது. இந்நிலையில், மத்திய பாஜக அரசிடம் தங்களது கட்சியே அடகு வைக்கப்பட்டிருப்பதை மறந்து, மற்றவர்களை குறை கூறுவது எப்படி நியாயமானதாக…

மேலும் படிக்க

அரியலூர் நகராட்சிக்கு மக்கள் வரி செலுத்தும் ஊமையா? – பேரிடர்களுக்கு மத்தியில் வாழும் பெரியார் நகர்!

அரியலூர் நகராட்சி எல்லைக்குள் உள்ள பெரியார் நகர் 5வது தெரு, இன்று ஆடு, மாடு, பன்றிகள் அலையும் பகுதியாக மாறியுள்ளது. இந்த விலங்குகளால் ஏற்படும் துர்நாற்றம், தூய்மையின்மை, மற்றும் பல்வேறு நோய்கள் பரவும் ஆபத்து குறித்து அதிகாரிகள் சற்றும் கவலைப்படவில்லை. இந்தப் பகுதியில் மின் கம்பம் இருந்தும், ஒரு தெருவிளக்கும் நிறுவப்படவில்லை. இரவில் பகிரங்க இருட்டில் மக்கள் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முழு வீதியில் முள்வேலி கூட அமைக்கப்படவில்லை. சுகாதார வசதிகள் முற்றிலும் ஏமாற்றம்தான். இதில்…

மேலும் படிக்க

நிகிதா புகாரால் அஜித் குமார் உயிரிழந்த சம்பவம் ஆண்களின் உரிமை பற்றிய மௌன சமூகத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது…

நமது நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்புக்கான பல்வேறு அமைப்புகள் மற்றும் சட்டங்கள் உள்ளன – மகளிர் ஆணையம், மாதர் சங்கம், மற்றும் பெண்கள் பாதுகாப்பு மையங்கள் போன்றவை அன்றாடமாகச் செயல்படுகின்றன. ஆனால், இதே போன்று ஆண்களுக்கென ஒரு சட்ட அமைப்போ, ஆணையமோ, உரிமை இயக்கமோ இல்லையே என்பது கவலையளிக்கிறது. சமீபத்தில், அஜித் குமார் என்ற வழிபாட்டு தள ஊழியர்மீது, நிகிதா என்ற பெண், தனது நகை காணவில்லையெனப் பொய் புகார் அளித்த சம்பவம், மிகக் கோரமாக முடிந்தது. அவர்மீது நடவடிக்கை…

மேலும் படிக்க